பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஒருநாள் போதுமா?

தாயம்மா இடைமறித்தாள். "அதைச் சொல்லாதீங்க, பெயிண்டர். நீங்க இன்னொரு வாட்டிச் சொன்னால் நானும் இந்த சணத்துலேயே செத்தாலும் செத்துடுவேன். வானாம் மவராசா அந்தக் கத."

பெருமாளும் உணர்ச்சி வசப்பட்டவர்போல், கைகளை பின்புறமாகக் கட்டிக் கொண்டு நின்றார். டிக்கடையில் ஒருவர் மாற்றி ஒருவராக டீக்குடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருமாள், யாருக்கோ போட்டு வைத்திருந்த கண்ணாடி டம்ளர் டீயை எடுத்து, தாயம்மாவிடம் நீட்டினார். அவள் இதைவிட வெத்தல பாக்கு." என்று இழுத்த போது, அவர் தன் சைட் பைக்குள் இருந்த பையை எடுத்து, அகல விரித்து, வெற்றிலையையும், பாக்குத் துளையும் நீட்டினார்.

திடீரென்று கிழக்குப் பக்கமாக இரண்டு வாலிப உருவங்கள் வருவது தெரிந்தது. அவர்கள் அங்குமிங்குமாகப் பார்த்துக் கொண்டு, அகன்ற கண்களோடு, விரிந்த கால்களோடு வருவதைப் பார்த்ததும், தாயம்மாவும், பெருமாளும், அவர்கள் சென்னைக்குப் புதிது என்பதைக் கண்டு கொண்டவர்கள்போல், ஒருவரை ஒருவர் புதிதாய் பார்ப்பது போல் பார்த்தபோது, கொத்தனார் கொண்டையா, "பெருமாள் தம்பி. ஜெயிலுல இருக்கிற வாட்ச்மேனுக்கு நாம ஏதாவது பண்ண முடியாதா" என்றார். தாயம்மா, தொலைவில் தெரிந்த உருவங்கள் மீது நாட்டிய கண்வீச்சை கொத்தனார் மீது போட்டுக் கொண்டே பேசினாள்.

"நம்மள மாதுரி ஏழை பாளைகளால என்ன பண்ண முடியும்? நமக்குள்ளதான் ஒற்றுமை கீதா?. பெயிண்டரைப் பார்த்து, கொத்துக்காரர் வயிரெறியது; கொத்துக்காரர் மேல பிளம்பருக்குப் பொறாமை, பிளம்பர் மேல, ஆசாரிக்கு பெரியாளுக்கு சித்தாள் மேல: அவ்வளவு ஏன் போகனும்? இப்போ எனக்கு ஐம்பத்தஞ்சு வயசு ஆவுது நாற்பது வருஷமா. சித்தாளாய் கீறேன். என்னால கான்கிரீட் பூடமுடியும் லெவல் பார்க்க முடியும் மோல்ட சரியா பண்ணமுடியும். நானு ஆம்புளையா இருந்தால். இந்நேரம் கொத்தனாராய் மாறி இருபத்திரண்டு ரூபா சம்பாதிச்சிருப்பேன். என்ன பண்றது? போறாத காலம் பொம்மனாட்டியா பொறந்துட்டேன். எட்டு ரூபாய் சம்பளத்துலே. நாற்பது வருஷமாய் சித்தாளாவே கீறேன். எங்கே காட்டியும் ஒரு பொம்மனாட்டி மேஸ்திரியாவோ கொத்தனாராவோ கீறாளா? நமக்குள்ள ஆயிரம் போறாம. பெயிண்டர் அடிக்கிற நிறத்துல, ஆசாரி போடுற கதவுல, ஒட்டர் தோண்டுற வாணத்துல. கொத்தனார் கட்ற சுவர் - ஒரு கட்டிடம் அப்படியே நிக்குது. ஆனால் எங்கெல்லாமோ சிதறிக் கிடக்குற சாமான்களை உயிரைக் கொடுத்து ஒரே இடமாய் ஆக்குற நாம், அந்த