பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஒருநாள் போதுமா?

பெயிண்டர் பெருமாள் பின்புறமாகக் கட்டிய கைகளை முன்புறமாக வீசிப் போட்டுவிட்டு, அன்பு ததும்பக் கேட்டார்.

"தம்பிக்கு எந்த ஊரு?" "திருநெல்வேலி ஜில்லாவுல ஆலங்குளத்துக்கு பக்கத்துல ஒரு கிராமம். நேத்துதான் மெட்ராஸ் வந்தோம்."

"என்ன விசேஷம்?" "ஊர்ல. வயல் வேலைக்குப் போவேன். இவள் நாற்று நடவுகளை எடுக்கன்னு போவாள். இப்போ மணல் தேரி மாதிரி ஆயிட்டு. வெயிலுல நிலமெல்லாம் பொசுங்கிட்டு."

"ஒனக்கு நிலம் உண்டா?" "கடன்தான் உண்டு." "பிறகு ஏன். ஏதோ பத்து ஏக்கர் நிலம் வச்சிருக்கிற விவசாயி மாதிரி வயலப்பத்தி இப்படி வருத்தப்படறே?"

"நீங்க சொல்லுறது நியாயமாப் படல. கிராமத்துல, நிலம் வச்சுருக்க விவசாயி ஒரு வருஷம் மழை பெய்யாட்டாலும். விதை நெல்ல குத்தியாவது சாப்புடலாம். வயலுல விளையாட்டாலும் கருப்பட்டி காச்சாவது பிழைச்சிக்கிடலாம். ஆனால் கூலிக்கு விவசாய வேலைக்குப் போற என்னை மாதிரி ஆளுவளுக்குத்தான். குளம் ரொம்ப முக்கியம். வெளிப்படையா சொல்லப்போனால். நிலம் பிறத்தியாருக் குன்னாலும், அந்த நிலத்தோட அருமை. எங்களுக்குத் தான் தெரியும். அந்த நிலத்துல விளைச்சல் இல்லாட்டா, நாங்க முளைக்க முடியாது."

"அதாவது. பங்களாம்மா பையனோட அருமை. அந்த வீட்ல வேலை பார்க்கிற ஆயாவுக்குத் தெரியறது மாதிரி" என்றார் கொண்டையா.

விவசாய ஆயாவான அந்த இளைஞன் அவர் சொல்வது புரியவில்லையானாலும் ஏதோ தன் நிலைக்கு இரங்கிப் பேசுகிறார் என்று நினைத்து திருப்தியோடு புன்னகை செய்தான்.

தாயம்மா ஒரு சந்தேகப் பிரேரணையைக் கொண்டு வந்தாள். "ஆமா, ஊர்ல இருந்து நீயும் ஒன் சம்சாரமும் வெளியேறுறதுக்கு பஞ்சம் மட்டுந்தான் காரணமா?"

அவன் ஏதோ சொல்லப் போனான் அந்தக் கூட்டத்திடம் முறையிடப் போவதுபோல் தோளில் கிடந்த தனது துண்டை எடுத்து முழங்கையில் போட்டுவிட்டு, விருத்த வியாக்கியானங்களோடு பேசப்