பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஒருநாள் போதுமா?

"சிப்ஸ் போட்டு. மேல்தளம். பூசணும். அஞ்சு பெரியாள். அஞ்சு சித்தாள் வேணும்."

ஐந்தல்ல; ஐந்தைந்து இருபத்தைந்து பேருக்கும் அதிகமாக அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். கண்களால் கெஞ்சியவர்கள். அவரது கண் பார்வைக்காக அது போகிற இடமெல்லாம் தன் பார்வையை மோத விட்டவர்கள். முன்னாலும் பின்னாலுமாக முண்டியடித்தவர்கள். மொத்தத்தில் பிச்சைக்காரர்கள்கூட, அப்படி மொய்க்க மாட்டார்கள். உழைப்பை பிச்சையிலும் படுபிச்சையாய் வழங்கியும், அது தெரியாத அந்த உழைப்புச் சதைகள், தங்களை விற்கக் குழைந்தார்கள். கம்பீரமான உடல்கள், கத்தாழைபோல் துவண்டன.

மேஸ்திரி சிறிது விலகி நின்று பேசினார்.

"காண்டிராக்டர் மோசமான கஞ்சன். வழக்கப்படி பெரியாள் சித்தாள் கூலி கிடையாது. பாதி நாளைக்கு. பெரியாளுக்கு நாலு ரூபா. சித்தாளுக்கு மூணுரூபா தான் தரமுடியும். இஷடம் இருந்தால் வாங்க. இல்லன்னா நடையைக் கட்டுங்க. அப்புறம் இசக்கு மசக்கு பேசப்படாது."

"ஒரு சிலர் நகன்றார்கள். பெரும்பாலோர், வேலை முக்கியம் கூலியல்ல என்பதுபோல், நின்ற இடத்திலேயே நின்றார்கள். மேஸ்திரிக்கு இன்னும் ரேட்டைக் குறைத்திருக்கலாமே என்று ஒரு ஆசை. தன் முன்னால் குழைந்த குழைவுக்கும், குழைந்தவர்களின் உடல் பலத்திற்கும் ஒரு விகிதாச்சாரத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொருவராகப் பார்த்து, தன் பக்கம் நிற்கச் சொன்னார். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நிற்கப்போன் தாயம்மாவைப் பார்த்து அதட்டினார்.

"நீ அந்தாண்ட போ. போன வாரம். ஒண்ணுக்குப் போற சாக்குல ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணுனே. ஒன் உடம்புக்கு முடியாது. ஒத்திப்போ..."

தாயம்மா கெஞ்சினாள்:

"அப்படிச் சொல்லப்படாது மேஸ்திரி. இன்னிக்கு வேலைக்குப் போனாத்தான். நாளைக்கு டாக்டராண்ட போவலாம். பத்தோட பதினொண்ணா சேர்த்துக்கோ."

"அந்தக் கத வாணாம்."

"நீயே தள்ளுனா. நானு யார் கிட்ட போவேன்? சொல்லு நயினா."

"ஆமா. நீ வயசுப் பொண்ணு. ஒன்னைத் தள்றேன். ஏம்மா. நீ ஊருக்குப் புதிசா? கட்டிட வேல தெரியுமா?"