பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 97 அன்னவடிவு கணவனைப் பார்த்துவிட்டு, அவன் அனுமதி கிடைத்த அனுமானத்தில் பதிலளித்தாள்.

"கட்டிட வேல பழக்கமில்ல. இவகளை வேணுமுன்னா கூட்டிக்கிட்டுப் போங்க."

"நீ வாlயா? அதுதான் கேள்வி" "சரி வாறேன்." "கட்டிட வேலை பழக்கமில்லன்னு சொன்னே." "செத்தால்தானா சுடுகாடு தெரியணும்? ஏழைங்களுக்கு வீட்ல இருக்கது. சுடுகாட்ல இருக்கறது மாதிரி தானே."

"பரவாயில்லையே. நல்லாத்தான் பேசுற. இப்படி வா."

அன்னவடிவு புருஷனைப் பார்த்தாள். பிறகு "இங்கேயே லாந்துங்க. நான் வாரது வரைக்கும் வெளியில் போவப்படாது" என்று சொல்லிக்கொண்டே மேஸ்திரி நின்ற பக்கமாக நகர்ந்தாள்.

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மன் மாதிரி, மேஸ்திரி முன்னால் நடக்க, அவரோடு தொங்கிக் கொண்டு போகிறவர்கள்போல் தேர்ந்தெடுத்த பெரியாள்களும், சித்தாள்'களும் நடந்தார்கள். அன்னவடிவு. கணவனைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே நடந்தாள். திடீரென்று அவளோடு வந்து சேர்ந்த கணவன் "நான் நீ வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்தில் வந்து நிக்கேன் என்றான். அவனை அதட்டப்போன மேஸ்திரிக்கு அதட்டுவதற்கு இன்னொரு ஆள் கிடைத்தது.

தாயம்மா, கெஞ்சிக் கொண்டே ஓடிவந்தாள்.

"மேஸ்திரி. இன்னிக்கு மட்டுமாவது கூட்டிட்டுப் போ மேஸ்திரி. நாளைக்கு எப்படியும் டாக்டராண்ட போகணும்."

"நீ ஒண்ணுக்குப் போறதுக்கா?"

அந்தப் பக்கமா நடந்துவந்த பெயிண்டர் பெருமாள் அதட்டினார்.

"யோவ், நீயில்லாம் மனுஷனாய்யா? அந்த அம்மாவுக்கு என்ன கோளாறோ? ஒன்னோட மூணு வருஷமா வேலைக்கு வர்ர பொம்மனாட்டி. நாற்பது வருஷமா சித்தாளாய் வேலை பாக்குறவள். இந்த நாட்ல யானைக்குக்கூட பென்ஷன் கொடுக்கறாங்களாம். ஆனால் யானையைவிட அதிகமா வேல பார்த்த அம்மாவுக்கு பென்ஷன் வானாம். வேல கூடவா கொடுக்கப்படாது? அந்த அளவுக்கா நெஞ்சில ரப்பு ஏறிட்டு? உன்னைச் சொல்லிக் குற்றமில்லய்யா? எல்லாத்துக்கும்