பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஒருநாள் போதுமா?

எங்களச் சொல்லணும். அட. நீ வேல கூட கொடுக்க வேண்டாம். பேச்சாவது மனுஷத்தன்மையாய் இருக்கப்படாதா?”

நடந்து கொண்டிருந்த மேஸ்திரி, சிறிது நின்றார். பெயிண்டர் பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்குப் பயம். கூடுமான வரை, அவரை வேலைக்குக் கொண்டுபோகமாட்டார். வேலையில் குறையும் சொல்ல முடியாது. அவர் கேட்கிற கேள்விகளை தள்ளவும் முடியாது, கொள்ளவும் முடியாது.

மேஸ்திரி, தயங்கி நின்ற போது, பெருமாள் நிதானமாகக் கேட்டார். "நீய இந்த அம்மாகிட்ட எத்தனையோ வாட்டி கட்டிட வேலைக்கு ஐடியா கேட்டிருக்கே. அந்தம்மா கொடுத்த அத்தனை ஐடியாவையும். என்ஜினியருங்களே ஆச்சரியப்பட்டு அமல் செய்து இருக்காங்க. முன்னாலே மாதிரி, இதால வேல பார்க்க முடியாட்டியும், ஒன்பதோட பத்தா நீ நெனச்சால் சமாளிக்கலாம். அப்புறம் ஒன் இஷ்டம்."

மேஸ்திரி தயங்கியபடியே பதிலளித்தார். 'இப்போ ஆளுங்கள எடுத்திட்டேன். இதற்கு மேல கூட்டிகிட்டுப் போனால் காண்டிராக்டர் கத்துவான். ஒங்க முகத்துக்காக நாளைக்கி வேணுமுன்னால் கூப்பிடுறேன். இப்போ யாரை கழிக்க முடியும்?"

அன்னவடிவு கணவனைப் நிமிர்ந்து பார்த்தாள். தாயம்மாவை - அவளின் தள்ளாத இயலாமையைப் ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு தோளை நிமிர்த்தியபடி சொன்னாள்:

"நான் வேணுமுன்னால் நின்னுக்கிறேன். இந்தம்மாவ கூட்டிக்கிட்டு போங்க."

வேறு வழியில்லாமல், மேஸ்திரி, தாயம்மாவைச் சேர்த்துக் கொண்டார்.

"நீயும் வா. பரவாயில்லை." என்று அன்னவடிவைப் பார்த்துச் சொல்லப்போனார். பிறகு குற்ற உணர்வாலோ அல்லது பெருமாளுக்குப் பயந்தோ, நினைத்ததைச் சொல்லவில்லை. தாயம்மா, அன்னவடிவின் கைகளைப் பிடித்துப் பாசம் பொங்க அழுத்திவிட்டு, மேஸ்திரியின் பின்னால் நடந்தாள். பெயிண்டர் பெருமாள் அந்தக் கிராமத்துப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தார். பிறகு "நாளைக்கு அந்த டிக்கடைப் பக்கம் வாங்க. எந்த மேஸ்திரி கிட்டயாவது சேர்த்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்தார்.

அன்ன வடிவும், அவள் கணவனும் டிக்கடைப் பக்கமாக