பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 99

நடந்தார்கள். கணவனின் பக்கத்தில் இருந்த கோணி மூட்டையை அவள் வாங்கப் போனாள். அவன் கொடுக்க மறுத்தான்.

இருவரும் டிக்கடையை நெருங்கியபோது, பிளாட்பாரத்தில் உழைப்பை விற்பதற்காக உட்கார்ந்து உட்கார்ந்து எழமுடியாமல் போன ஒரு மனிதர் திடீரென்று வாந்தியெடுத்தார். அன்னவடிவு டீக்கடையில், பாய்லருக்கு அருகே இருந்த பாதியளவு நீர் நிறைந்த டம்ளரை. கடைக்காரரிடம் கேட்காமலே எடுத்துக் கொண்டு, அந்த மனிதரைப் பார்த்து ஓடினாள்.

காலையில் டியையும், பீடியையும் மாறிமாறித் தின்று வேலைக்குப் போகவேண்டும் என்ற மனோ திடத்தால், பித்த மயக்கத்தைக் கட்டுப்படுத்திய அந்த உழைப்பாளி. இப்போது உழைப்புப் போனதால் எல்லாம் போகட்டும் என்பதுபோல், வயிற்றை விட்டுப் பிடித்தார். அது வாந்தியின் வடிவில் ஒப்பாரி ஒலியோடு வெளிப்பட்டது. அவர் -

வாந்தியெடுத்துக்கொண்டே இருந்தார். அதில் வறுமையின் நிறமான மஞ்சள் இருந்தது. இயலாமையின் மயக்கமான பித்தம் இருந்தது.

வறுமையை உண்ட வயிறு இப்போது அதனை வாந்தியாகத் திருப்பிக் கொடுத்தது.

2

மாலை மயங்கிக் கொண்டிருந்தது.

பிளாட்பாரத்தின் தூண்கள் போல் நின்றவர்கள், தூங்கிக் கிடந்தவர்கள், சோம்பிக் கிடந்தவர்கள், ஆகாயத்தைத் துழாவிப் பார்த்தவர்கள். பூமியைக் குத்திப் பார்த்தவர்கள், வயிற்றைப் பிடித்துக் கொண்டவர்கள் - ஆகிய ஆண், பெண், சிறுவர். சிறுமியர் அத்தனை பேரும், வானத்தைப் பார்க்கும் மானாவாரிக் குளம்போல் மேஸ்திரிகளுக்காக நின்று ஒவ்வொருவராகப் போய்விட்டார்கள்.

அன்னவடிவும், அவள் கணவனும், அந்தத் தேநீர் கடைக்கருகே வெறுமையாய் உட்கார்ந்திருந்தார்கள். வருவோர் போவோர் கண்குத்திப் பாம்பாய் பார்ப்பதைப் பார்த்து கீரிபோல் சீறப் போனவள், எலிபோல் அடங்கிப்போனாள். கணவனைப் பார்த்து எங்கே போனாலும். டவுனுப்பக்கம் வேண்டாம் என்று தான் சொன்னதை அவன்