பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஒருநாள் போதுமா?

பல்வேறு கோணங்களில் நகர்ந்து, ஊதினான். வேலு அந்த ஊதிய மனிதரைப் பார்க்கப் போனான்.

கால்மணி நேரம் கழித்து திரும்பிய கணவனைப் பார்த்து, இன்னும் அடுப்பூதும் பெண்ணான அன்னவடிவு. "ஒங்க சின்னய்யா எதுக்குக் கூப்பிட்டாராம்?" என்றாள். வேலு எரிச்சலோடு பேசியபோது, அவள், கண்ணுள் இருட்டான புகை எரிச்சலை சகித்து, மூடிய கண்களைத் திறந்தாள்.

"இந்தத் தெருவுல சோறுபொங்கித் திங்கறதைப் பார்க்க அவருக்கு அவமானமா இருக்காம். நம்மால, நாம் பிறந்த ஊருக்கே அவமானமாம். சாதிக்கே தலைக் குனிவாம். அதனால பத்து ரூபா தாரேன். இன்னைய ராத்திரி ஹோட்டலுல சாப்புட்டுக் கழிங்க. அப்புறமாய் வேற பேட்டைக்குப் போயிடுங்கன்னு சொல்லிவிட்டு, சொல்லி முடிக்கு முன்னாலேயே, பத்து ரூபா நோட்ட திணிச்சாரு."

"ஓங்க சின்ன அய்யா கொடுத்ததை என்ன செய்தீரு?" "என்ன செய்திருப்பேன்னு நினைக்கே?" "திருப்பிக் கொடுத்திருப்பீர்." "பேசாமலா கொடுத்திருப்பேன்?" அந்தப் பேச்சத்தான் இன்னொரு தடவ பேசுமேன்?" "சின்னய்யா. தெத்தப்படாது. திருடப்படாது. நேர்மையா எதுல வேணுமுன்னாலும் இருக்கலாம். பங்களாவுல திருட்டுச்சோறு சாப்புடுறதவிட, ரோட்ல கஞ்சிச் சோறு சாப்புடுறது எவ்வளவோ மேலு. ஏழை பாளைகளை கசக்சிக் கசக்கிப் பிழிஞ்சு கரண்ட் அடுப்புல சோறு பொங்குறதவிட கல்லடுப்புல பொங்குற சோற வயிறு தாங்கு"முன்னு சொல்லிட்டு அவரோடு சொல்லுக்குக் காத்திராமல் வந்துட்டேன்.

"பரவாயில்லை. நான் நெனச்சது மாதிரியேதான் பேசியிருக்கியரு. கொஞ்சம் இந்த அடுப்ப ஊதும். ஊதி ஊதி என் கண்ணுதான் ஊதிப்போச்சு."

சந்தி மனிதர்களின் சாப்பாட்டு விவகாரம் முடிந்து கொண்டிருந்தது. அதுவரை தங்களோடு தெருத்தம்பதியாக வந்து சேர்ந்த அவர்களைக் கவனிக்காத அந்த தெருப்புத்திரர்கள், தங்கள் வேலைச் சிரமத்தில் சமையல் சித்தில் - தங்களையே மறந்திருந்த அவர்கள் இப்போது அவர்களை உற்றுப் பார்த்தார்கள். கடிச்சிக்கா ஏதாவது வேண்டுமோ என்பதுமாதிரி தாலாவில் கஞ்சியை ஊற்றி, பச்சை மிளகாயை கடித்து வறுமைக்குச் சூடு போடுவது போல், கஞ்சியை ஊத்தி, ஊத்திக் குடித்த வேலு. மனைவியின் தட்டில், தன் தட்டில் இருந்த