பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஒருநாள் போதுமா?

ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை போட்ட அலுவலகம். சிமெண்ட் மூட்டைகளைக் கொண்ட ஸ்டோர் ரூம். இவற்றைச் சுற்றி பக்கவாட்டில் போடப்பட்ட செவ்வக இரும்புக் கம்பிகளின் பீம்கள் உள்ளேயும் வெளிய்ேயும் கான்கிரீட் போட்டு, அவை மறைந்து, அவற்றிற்கு மேலே செங்கல் சுவர்கள் வளர்ந்தபடி இருந்தன. இன்னொரு ஓரத்தில் கட்டி முடிந்த பகுதிக்கு கொத்தனார் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தார். ஜல்லிக் கற்களின் குவியல். அவை போதாதென்று பெரிய பெரிய பாராங்கல்லை கையுடைப்பால் ஜல்லிகளாக்கும் கல்லடுப்பு மனிதர்கள். பாளம் பாளமாக இறங்கிய மரமுண்டங்கள்; அவற்றைப் பகுத்தும், வகுத்தும் அறுக்கும் ஆசாரிகள் பலகைகளில் டிரில் போட்டும் திருகாணி போட்டும் மேக்கப் செய்யும் கார்பென்டர்கள் முற்றிலும் கட்டிமுடித்த அறைக்கு டிஸ்டெம்பர் அடிக்கும் பெயிண்டர்கள் முடியாத அறையில் சிப்ஸ் கற்களையும், செங்கல் கற்களையும் போட்டு, பிறகு கடுக்காய் தண்ணீர் தெளிக்கும் சித்தாள் பெண்கள். ரப்பர் குழாயை தூக்கிப் பிடித்து, நீர் பாய்ச்சும் வாலிபன், அவனைப் பார்த்து உறுமுவது போல் ஊளையிடும் ஆயில் எஞ்சின். பல்வேறு வடிவிலான மோல்டுகள்' 'கவ்வை' போட்டுக் கொடுக்கும் பெரியாள்கள்' கற்களையும், மண்ணையும் சுமக்கும் பெண்கள் ஜல்லிக் கற்களைக் கழுவும் பால்மணம் மாறா சிறுவர்கள் மூலமட்டத்தாலும், குண்டாலும் லெவல் பார்க்கும் கொத்தனார்கள். இவர்களை லெவல் பார்க்கும். மேஸ்திரிகள்;

சாரம் கட்டி, ஏணிப்படிகளில் ஏறியபடியே தலையில் கல்லோ மண்ணோ ஏற்றி, தவழ்வது போல் உயரும் பெண்கள். பாசத்தால் கீழே புழுதியில் புரளும் தன் பிள்ளைகளைப் பார்த்து, ஒன்னப் பார்த்து. கொஞ்சம் தவழத் தெரிஞ்சுக்கிட்டேன் பாத்தியா என்பது மாதிரியான அம்மாப் பார்வை. இப்படித் தவழ்ந்த நானு, ஒன்னை மாதுரி ஏணிப் படியில் தவழ்ந்து முன்னேற, எத்தனை நாளம்மா ஆகும்? என்பது போலான பிள்ளைப் பார்வைகள், வெயிலில் குடை பிடித்தபடி அங்குமிங்குமாக ஆட்களை ஆட்டும் காண்டிராக்டர்களின் காலாட்களான சூப்பர்வைசர்கள். வெளியே 'டீ சாப்பிடப்போகும் தொழிலாளிகள் அந்தக் கட்டிடத்தையே தூக்கிக் கொண்டு போகலாம் என்றும், அப்படிப் போனால், தான் அனுமார் மாதிரி பறந்துபோய் அதைத் துக்கி வந்து காண்டிராக்டர் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும், என்று நினைத்ததுபோல் பறவைப் பார்வை பார்க்கும் வாட்ச்மேன். அவரை வாட்ச் செய்யும் காண்டிராக்டரின் கையாள்.

மொத்தம் அறுபது பேருக்கு மேலிருக்கும். ஓரச்சுவரில் சாத்திய மர ஏணிகளில் மண் சுமையோடு ஏறி. குறுக்காய் போட்ட பலகை