பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஒருநாள் போதுமா?

"அதோ அந்தப் பக்கமா போயிருக்காவ." "அரைமணி நேரமா என்ன பண்றாள்." "என்னால வெளிப்படையாச் சொல்ல முடியல. காரணம் இல்லாம போவல."

"காரணமாவது மாரணமாவது. வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாமல் வேல பார்க்க வேண்டாமா? அரைமணி நேரம் ஆகுது ஆளக் காணலியே, என்ன பண்றாள்?

"என்னமும் பண்ணட்டுமே சாரே, அவிய வேலயயும் நான் சேத்துப் பார்க்கிறேன். இப்போ வந்துடுவாவ'

"ஒன் முகத்துக்காக சும்மா போறேன்." "நீங்க ஒண்ணும் என் முகத்துக்காக போகவேண்டாம். என் வேலைக்காகப் போனால் போதும்."

"ஒன் வேலையைப் பத்தி இனிமேத்தான் தெரிஞ்சிக்கனும், சீக்கிரம் தெரிந்தால் நல்லது."

சினிமாக் கவிஞர்கள் மாதிரி இரட்டை அர்த்தத்தில் பேசிய அந்தப் பேர்வழியைப் பார்த்தபடி, அன்னல்டிவு காறித் துப்பினாள். அவன் அதைப் புரிந்து கொண்டு அதற்குப் பதிலாக தன் அதிகாரத்தைத் துப்பத் தீர்மானித்தான்.

"அரைமணி நேரமா என்ன பண்றாள்? நான் சொன்னேன்னு அவளைக் கூட்டி வா."

அவன் பேச்சைப் பொருட்படுத்தாததுபோல், அன்னவடிவு தன்பாட்டுக்கு மண்ணைக் கொட்டுவதும் அதைப் பரப்புவதுமாக தன்பாட்டுக்கு இயங்கினாள். வேறு வழியில்லாமல் உழைப்பின் முத்திரைகளாகத் தெரியவேண்டிய அவயவங்கள் அவன் ஊதாரி மனத்திற்குத் தீனியாகத் தோன்றின. அதட்டினான்.

"இந்தாம்மா ஒன்னத்தான் அந்த அம்மாவக் கூட்டிட்டு வாறியா, இல்ல ஒனக்கும் சேர்த்து சீட்டுக் கிழிக்கணுமா?"

அன்னவடிவு. அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அந்தப் பயலோட மூஞ்சியில் சில நிமிடங்களாவது விழிக்காமல் இருக்க நினைத்தவள் போல், தாயம்மா போன பக்கமாகப் போனாள். அதிகாரத்தைக் காட்டிவிட்டதால் அன்னவடிவு தன்னை விரும்புவாள் என்றும், போசாரே என்று குழைவாள் என்றும் எதிர்பார்த்த சூப்பர்வைசர், அவள், அலட்சியமாகப் போவதை தனது ஆண்மைக்குறைவாக