பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஒருநாள் போதுமா?

"என்னம்மா நெனச்சிக்கிட்டே? தெரியாமத்தான் கேட்கேன். இது என்ன ஒன் ஆம்புடையான் கட்டுற பில்டிங்குன்னு நினைப்பா? வேணுமுன்னால் ஷெட்டுல வந்து ரெஸ்ட் எடுக்கிறீயா, டாக்டருக்கு போன் போட்டு வரச் சொல்லவா?"

அன்னவடிவால், இயங்க முடியவில்லை. "ஸாரே. மரியாதி குடுத்து மரியாதி வாங்கணும். அந்தம்மா. வயசென்ன? ஒம்ம வயசென்ன? எருதுவுக்கு நோவாம், காக்காவுக்குக் கொண்டாட்டமாம்."

"ஆமா. நீ எருது, நான் உன்மேல உட்காரப் போற காக்கா." தாயம்மா, தன்னை மறந்தாள். கிட்னி வேதனையை மறந்தாள். அன்னவடிவின் முகத்தைப் பார்த்து, அதில் படர்ந்த கோபத்தீயை தன் உடம்பெங்கும் பற்றவைத்துக் கொண்டவள் போல் கத்தினாள்.

"நீயெல்லாம் மனுஷனாடா? பேமானி அம்மா வயித்துல இருந்து பிறந்தியா? இல்ல ஆகாயத்துல இருந்து குதிச்சியா? கஸ்மாலம். கம்மனாட்டி. ஒரு பொம்பளகிட்ட எப்படிப் பேசணுமுன்னு தெரியாத நீ. கூடப்பிறந்த அக்காமேல கூட உட்காருவே. போடா பொறுக்கி."

சூப்பர்வைலர் தலைகுனிந்தபடியே நடந்தான். அலுவலக ஷெட்டுக்குள் நுழையும்போது மட்டும் அவர்களை கம்பீரமாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நுழைந்தான். சிறிது நேரத்தில் "தாயம்மா. தாயம்மா." என்று ஷெட்டுப் பக்கத்தில் நின்றபடியே, மேஸ்திரி கைதட்டிக் கூப்பிட்டார். மேஸ்திரி நிற்கும் இடத்தை நோக்கி ஓடினாள்.

"என்னம்மா நீ. பேஜாரு பண்ற. வேல பார்க்கலன்னு சொன்ன சூப்பர்வைஸ்ரைப் பார்த்து பொறுக்கின்னு சொன்னியாம்."

"எந்தப் பொம்மனாட்டியாவது. வேலையில மட்டும் குற்றம் சொல்றவனைப் பார்த்து அப்படிக் கேட்பாளா?"

"ஓஹோ அப்படின்னா. நீ அவனைத் திட்டுனது நிசந்தானா? ஒன்னால எனக்குக் கெட்ட பேரு. ஒன்னை நிறுத்தாட்டால் காண்டிராக்டர் என்னை நிறுத்திடுவேன்னு சொல்றார். இந்தா ஒன் கூலி. மூணு ரூபாய். நல்லா எண்ணிக்கோ. இனிமேல் ஒன் வாடையே.வாணாம்."

"மேஸ்திரி என்ன நடந்ததுன்னு கேளு. நான் சொன்னது தப்புன்னா. அப்புறம் ஒன் ஜோட்டாலே என்ன அடி"

"அந்தக் கதெல்லாம் வாணாம். இந்தா ஒன் பணம்." தாயம்மா, பணத்தை வாங்க மறுத்தபோது, மேஸ்திரி அந்த நாணயங்களை அவள் கைகளில் திணித்தார். அவளுக்கு ஏதோ ஒரு