பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஒருநாள் போதுமா?

"ஏய்யா. ஒனக்கு மூளை இருக்கா? இந்த சாவுக் கிராக்கிய எதுக்காக வேலைக்குக் கொண்டுவந்தே? இப்போவோ நாளையோன்னு இருக்கிறதெயெல்லாம் என் தலையில் ஏய்யா தள்ளுறே? இந்த தாயம்மா, இந்தக் கட்டிடம் முழுதும் ஒண்னுக்கு இருந்து, அதை கரைய வச்சுடப் போறாள். மொதல்ல ஒன் சீட்டக் கிழிக்கணும்".

தாயம்மாவுக்கு, தன்நோயே, அவன்களுக்கு கேலிக்கு உரியதாய் போனதை உணர்ந்தவளாய் நிமிர்ந்தாள். இனிமேல், அவன் அழைத்தாலும், இங்கே வேலை பார்க்கக் கூடாது. இன்றைக்கு மட்டுமே வாழ்ந்தாலும், மானத்தோடு வாழனும், வெளியே போனாலும் கம்பீரமாகப் போகணும். தாயம்மா, தன்மானத்தின் தாயாகி, கம்பீரப்பட்டு, கர்ஜித்தாள்.

"நாற்பது வருஷமா உழைச்ச எனக்கே இந்தக் கதின்னா, என்னோட உழைப்பை உறிஞ்சுன ஒன்ன மாதுரி பன்னடாட மனுசங்க கதி என்ன கதியோ? என் நோயப் பார்த்து, இரக்கப்படாம இளக்காரப்பபடுறியா? படு. படு. நீ படுக்கிற காலம் வரும். அப்போ. சீ. நான் என் வாயால சொன்னா அசிங்கம். அது நடக்கத்தான் போவுது

"ஏய். போலீஸ்ல போன் பண்ணணுமா? ஏய் சுந்தரம்"

"அட சரிதான் போய்யா. மனசாட்சியுள்ள மனுஷனாய்யா நீ? வேலையை விட்டு நீக்கு, பரவாயில்லை. நான் என்ன சொல்ல வந்தேங்கிறதை கூட கேட்க விரும்பலியே, நீயுல்லாம் மனுஷன்னா? அந்த சூப்பர்வைசர் ஒன் சம்சாரத்தோடயும் வெண்ட வெண்டயா பேசப்போறான் இல்லாங்காட்டி அவள இஸ்துக்கினு பூடுவான், அப்போ புரியும் அன்னவடிவோட வேதனை. ஏழைக்கி எதுவும் பண்ணித் தொலையணுமுன்னு சொல்லல. ஆனால் அவங்க என்ன சொல்ல வாராங்கன்னாவது கேட்க முடியாத அளவுக்கு நெஞ்சில மஞ்சா சோறா?"

பெரிய மனுவியேன்னு பாக்கறேன். இல்லேன்னா...'

"அதனாலதான் டீ போட்டு பேசினீயா. ஒண்ணே ஒண்ண மட்டும் மறந்துடாத கண்ணா. நீங்க ஒவ்வொருவனும் குடிக்கிற விஸ்கி. ஒரு மேஸ்திரியோட கூலி. ஏழைங்க சாப்புடுற பிரியாணி, ஒரு பெரியாளோட சம்பளம். நீங்க வாயில திணிக்கிற முந்திரிப் பருப்பு, ஒரு சித்தாளோட பணம். நீ விஸ்கி குடிக்கல. பிரியாணி தின்னல. வெயிலுல நின்னு ஆகாயத்துக்குத் தாவி உழைக்கிற ஏழைகளைத் தின்னுறே. இந்த ஏழைப் பாளைங்க ஒன்னையும் தின்னுற காலம் வரும். அதுவரைக்கும் இதோ இந்த பிசாத்து மூணு ரூபாய் வச்சுக்கோ. அப்புறமா கணக்குப் பார்த்து வாங்குற காலத்துல வாறேன்."