பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 115

தாயம்மா, கையில் இருந்த நாணயங்களை விசிறியடித்தாள். அவை காண்டிராக்டரின் பிராண்டி பெக்கிலும் இதரர்களின் பிரியாணிகளிலும் விழுந்து எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் காட்டுவதுபோல மதுபானத்தையும், மற்றவற்றையும் சிதற வைத்தன.

தாயம்மாவின் ஆவேசத்தில் அகப்பட்டவர் போல், மேஸ்திரி, அவளை மெள்ள அணைத்தபடியே வெளியே கொண்டு வந்தார். அவள், அவரை ஏறிட்டுப் பார்க்காமலேயே ஆவேசமாக நடந்தாள். அவளைப் பார்த்து ஓடி வந்த அன்னவடிவை திரும்பிப் போகும்படி கைகளால் ஆணையிட்டு விட்டு, கால்களை நீட்டிப் போட்டாள்.

வெளியே வந்த தாயம்மாவுக்கு யதார்த்தம் சுட்டது. காசையாவது வீசியடித்திருக்க வேண்டாம் என்பதுபோல் நினைத்து டாக்டரிடம் போகவேண்டியதை நினைவுக்குகொண்டு வந்தாள். பிறகு வீசியடித்தது சரிதான் என்பது போல், வீதியில் நடந்தாள்.

விதியே வீதியானதுபோல் தரை சுட்டது. தரையே தன் நிலையானதுபோல் அவள் தாவித்தாவி நடந்தாள். மீண்டும் புட்டத்தில் வலி. தயிர்கடையும் மத்துப்போல் புட்டத்தின் இருபக்கமும் ஏதோ ஒன்று. ஏதோ ஒனறைக் குடைவது போன்ற பெருவலி. நெருப்பே தாளாத எரிச்சல். கத்தித்தீராத - கத்த முடியாத - கடுப்பு. இத்துடன் நாற்பதாண்டு கால உழைப்பு, பிரசவமாகி இப்போது முதலும் முடிவும் அற்று முண்டமாய் அபார்ஷனாய் போன தவிப்பு.

தாயம்மாவைத் தாங்கிப் பிடிக்க யாரும் இல்லாததால் அவள் தன்னைப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.

4

அன்னவடிவு குடிசைக்குத் திரும்பிய போது, தாயம்மா தரையில் புரண்டு கொண்டிருந்தாள். அவளின் ஒரே சீமந்த புத்திரன் கோவிந்தனும், இன்னொரு பக்கம் குடித்துவிட்டுப் புரண்டு கொண்டிருந்தான். இருபத்திரண்டு வயது வாலிபன், ஆத்தாக்காரி கொண்டுவரும் காசை அவளுக்குத் தெரியாமல் எடுத்து, பலருக்குத் தெரியும்படி பட்டை போடுபவன்.

அன்னவடிவு. தாயம்மாவின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு நெஞ்சை நீவிவிட்டாள். காண்டிராக்டரின் முன்னால்கூட கண்ணிர் விடாத அந்த மூதாட்டி, இப்போது வடிவின்