பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 ஒருநாள் போதுமா?

மடியிலேயே குப்புறப் படுத்து அவள் புடவையில் தன் கண்ணிரைத் துடைத்தாள். பிறகு மெல்ல எழுந்து தரையில் புரண்ட மகனைப் பார்த்து ஓலமிட்டாள்.

"ஏய். சோமாறிப் பயலே. தோ. பாருடா. இது யாரு பெத்த பொண்ணோ என்னை எப்படிக் கவனிக்குதுன்னு பாருடா? ஒன்ன வயித்துல சொமந்து பெத்தேன். நான் நோவில துடிக்கையிலும் நீ பட்டச் சாராயமாடா போடுறே? பாடையில் போறவனே. நீ குடிச்சிட்டு கும்மாளம் பூடணும். நானு கல்லு மண்ணு சுமக்கணுமா? பாரு அன்னம்: போனவாரம் அடுக்களைப் பானையில... அஞ்சு ரூபா வச்சிருந்தேன். டாக்டராண்ட போவதாய் இருந்தேன். இந்த கஸ்மாலம். அதை எடுத்துப் பட்ட பூட்டுட்டான். இல்லான்னா அப்பவே டாக்டருட்ட போய், நோய் குணமாயிருக்கும். இன்னிக்கு அப்படி ஒதுங்கி இருக்கவும் வாணாம். அந்தப் பண்ணிப் பசங்ககிட்ட பேச்சும் வாங்கியிருக்காணாம். பாரு இந்த தத்தேரிய. இவன் ஒடம்பில் ரத்தம் ஒடல. பட்டச்சாராயம் ஓடுது. எனக்கு முன்னாடியே பூடுவான் போல."

தாயம்மா கண்களைத் துடைக்காமல், விழிகளைத் தளர்த்தாமல் மகனையே பார்த்தாள். அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்த கோவிந்தன், தடுமாறி எழுந்தான். அன்னவடிவை, அப்போதுதான் பார்த்திருக்கிறான். திடுக்கிட்டு எழுந்தான். கொடியில் கிடந்த லுங்கியை எடுத்து, குடிசைக்கு வெளியே வந்து, கட்டிக்கொண்டு போய்க் கொண்டு இருந்தான். தாயம்மா "ஏ கஸ்மாலம், தோ கஞ்சி ஆவப் போவுது. குடிச்சிட்டு சாவு" என்றாள். அன்னவடிவு எதுவும் பேசாமல், துயரச்சாயலோடு, தாயம்மாவைப் பார்த்தபோது, அந்தக் கிழவி, பெருமை பிடிபடாமல் பேச்சால் ஆடினாள்.

"பாரு அன்னம் ஒன்னப் பாத்தா பெட்டிப் பாம்பாய் ஆயிடுறான். ஒன்னைப் பாத்ததும் ஓடிட்டான். கட்டையில் போவான். நல்லவன்தான். எல்லாம் சேர்ப்பார் சேர்க்கை பொறுக்கிப் பயலுக சவகாசம்."

அன்னவடிவுக்கும், ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்று காலையிலேயே சில பெண்கள் "சீக்கிரமா வீடு பாரு. அந்த க்ஸ்மாலம் குடிகார மொட்ட. ஒண்னு கிடக்க ஒண்ணு நடந்துட்டா. அப்பால ஆரச் சொல்றது?" என்று உபதேசித்தார்கள். அன்னமும், பயந்து போனாள். ஆனால் அவனே. தன்னைப் பார்த்ததும். தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு போய் விடுகிறான்!

அன்னவடிவிற்கு, யோசிக்க நேரமில்லை. கஞ்சி காய்ச்சுவதற்காக மண்பானையை எடுத்துக் கொண்டு குழாயடியை நோக்கி போனாள். அது குழாயல்ல. கார்ப்பரேஷன் ஒரு கழிசடை என்பதற்கான