பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஒருநாள் போதுமா?

குழாய். ஒவ்வொண்ணும் மாறி மாறி ஆப் எடுத்துக்கும். கக்கூஸ் நாத்தத்தைப் பாத்தியா? அங்க கிடக்கறதை எடுத்து கார்ப்பரேஷன் கட்டிடம் மேல வீசியடிக்கணும். அப்போதான் புத்தி வரும், பொறுப்புல இருக்கற பசங்களுக்கு."

அந்தப் பெண், அப்படித் தீவிரமாகப் பேசியிருக்க மாட்டாள். அன்னவடிவு அவள் சொல்வது சரிதான் என்பதுபோல அனுதாபத்துடன் முன்னும் பின்னுமாக தலையை ஆட்டியதால், அவள் கொட்டிவிட்டாள். தன் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்த அவளுக்கு உதவுவது போல ஒரு பக்கெட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை அன்னவடிவின் பானையில் ஊற்றினாள்.

குடிசைக்குத் திரும்பிய அன்னவடிவு அடுப்பைப் பற்ற வைத்தாள். தாயம்மாள் அவளுக்கு உதவுவதற்காக எழுந்திருக்கப் போனாள். அவள் அந்த முதியவளை சைகையால் தடுத்து விட்டாள். திடீரென்று வெளியே சத்தம். கோவிந்தனின் போர்ப்பரணி. தாயம்மா எழுந்து வாசலுக்கு வெளியே போனாள். அன்னவடிவு வாசலில், அதாவது தொங்கிக் கொண்டிருந்த கோணியைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தாள். கோவிந்தன் ஒருவனின் தலைமுடியைப் பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தான்.

"சொன்னத இன்னொருவாட்டி சொல்லுடா கஸ்மாலம்? என் ஸிஸ்டரயா யாருடா ஒன் வீட்ல இருக்கிற குட்டி? ஏதாவது கிராக்கியான்னு கேக்குறே? சோதா. சோமாறி. என்ன பெத்த ஆத்தாள. தான் பெத்த மவளா கவனிக்கிற என் சிஸ்டரப் பார்த்தாடா கிராக்கின்னு கேட்டே? ஒன்கிட்ட இன்னா பேச்சு!"

கோவிந்தன். பேச்சை நிறுத்திவிட்டு, கை வீச்சையும் கால் வீச்சையும் துவக்கினான். இதற்குள், விட்டுடுடா, கஸ்மாலத்த என்றனர். 'விடாதடா சோமாறிய என்றார்கள். எப்படியோ அமர்க்களம் ஓய்ந்தது. அன்னவடிவு, அடுப்படிக்கு வந்தாள். தன்னால் இப்படிப் பல ட்டாக்கள் ஏற்பட்டு ராமன் கெட்டதும் பெண்ணாலே, ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று கெட்டுப்போனவர்கள் சொல்வது. தனக்கும் வருமோ என்று தவித்தாள். அதே சமயம் பெரும்பாலான குடிசை மக்கள், அந்தக் கஸ்மாலத்தைத்தான் கண்டித்தார்கள் என்பதை உணர்ந்தபோது அன்னவடிவு நிம்மதியடைந்தாள். வெளியே கோவிந்தன் புலம்பிப் புரண்டான்.

"என்னோட பிறப்ப எப்படிக் கேட்டுட்டான் பாரு டேய் ஒன்ன ஒன்ன. ஏண்டா கம்னாட்டி, அந்த அம்மாவப் பார்த்து ஒன் அம்மா ஞாபகம் தோணாண்டாம்? அக்கா ஞாபகம் தோணாண்டாம்? ஒனக்கு