பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 119

அப்படிதோணாதுதான்டா நாயே. நீ அவங்களையும் தப்பாப் பார்க்கிறப் பயல், பொயுது விடியட்டும். காலையில பாரு வேடிக்கையை"

அடுப்புத்தீ பற்றி விறகுகளை சாம்பலாக்கிக் கொண்டிருந்தது. அன்னவடிவு, ஊரில் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தாள். வசதி படைத்த காலிப்பயல் ஒருவன், கையைப் பிடித்தபோது கூட, சொந்தக்காரர்களே. ஏனென்று கேட்கவில்லை. அப்படி ஏனென்று கேட்டவர்களும், அவளைத்தான் சந்தேகப்பட்டு குறுக்கு விசாரணை செய்தார்கள். ஆனால், இங்கே இரண்டு நாள் பழக்கத்தில், அதுவும் தன் முகத்தை நேராய் நிமிர்ந்து பார்க்கக்கூடத் தயங்கும் ஒருவன், தன்னைப் பேசியவனை, தன்னையும் பணயம் வைத்து அடிக்கிறான். இது இந்த சகோதர பாசம், சொந்தக்கார மாமாவிடம் கிடைக்காத பாசம், இவர்களிடம் கிடைக்குதே. இதுக்குக் காரணம் என்ன? எது?

அன்னவடிவு, காரணகாரியத்தில் ஈடுபடாமல், பாசப் பெருக்கில் விம்மினாள். கண்ணில் இருந்து சுரந்த நீரும், ஊரில் அக்கரமத்தைக் கண்டுக்காதவர்களுக்காக அழுத நீரும், பாசத்தைக் கண்டுபிடித்ததில் ஏற்பட்ட ஆனந்த நீரும் கலவையாகி, துளித்துளியாகக் கீழே விழுந்து, கொழுந்துவிட்டு எரிந்த சுள்ளி நெருப்பை அணைக்கப் போனது.

கஞ்சிக் குடிப்புப் படலம் முடிந்தது. அன்னவடிவு என்ன சொல்லியும் கேளாமல், தாயம்மா ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு, தெருவில் போய்ப் படுத்துக் கொண்டாள். கோவிந்தன் ஆளையே காணவில்லை. இதுவரை வீட்டுக்குள் படுப்பவன் அவன்தான். எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, சாப்பாட்டுச் சமயத்திற்கு வந்த வேலுவும், அவளும் குடிசைக்குள் தனியே விடப்பட்டார்கள்.

பாய் விரித்தாகி விட்டது. பக்கத்துக்கு ஒருவராக உட்கார்ந்து இருந்தார்கள்.

வேலு, மனைவியை ஆசையோடு நெருங்கினான். அவள் கையை இழுத்து தன்மார்பில் போட்டுக் கொண்டே "ரெண்டு வாரம்மா. பிரம்மச்சாரியா இருந்துட்டோம். எவ்வளவு நாளாச்சு? ஏன் பிள்ள ஒரு மாதிரி இருக்கே?" என்றான். அன்னவடிவு அடக்கிய ஆசை அமுங்கிப் போக பதில் சொன்னாள்.

"தாயம்மா பாட்டிய. வேல செய்யுற இடத்துல என்ன பாடு படுத்திட்டாங்க பாத்தியளா?"

வேலு. அவளுக்கு ஏற்பட்ட நிலைமையை, மனத்திற்குக் கொண்டு வந்து பார்த்தான். ஊனக்கண்ணில் அதிகமாய் படாதது ஞானக்கண்ணில் பட்டது. சலிப்போடு பதிலளித்தான்.