பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஒருநாள் போதுமா?

'எல்லாம். நம்ம நேரம் பிள்ள... நமக்கு ஒத்தாசை செய்யுறவங்களுக்கும் உபத்திரம் வருது பாரு..."

வேலுவின் ஆண்மைச் சக்தி அனுதாபச் சக்தியாகியது. அவனும் மனைவியைப்போல் ஒரு சக்தியானான். வேறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவனுடன் சேர்ந்து படுத்த அன்னவடிவு அவர் கோபப்பட்டுக் கொண்டாரே என்பதுபோல் அவன் கழுத்தில் கை போட்டாள். அவன் கோபப்படவில்லை. அவள் கையை எடுத்துத் தன் கையோடு சேர்த்துக் கொண்டான். கோபம் அவள் மீதல்ல.

சிறிது நேரத்திற்கு முன்பு வரை அவளை மெல்லக் கடித்து. சுவைக்கத் துடித்த வாய் இப்போது யாரையோ கடித்துக் குதறப் போவதுபோல் பற்களை நெறிக்க வைத்தன. அவளை அணைக்கத் துடித்த கரங்கள் யாரையோ நொறுக்கப் போவது போல் முறுக்கேறின. கடுஞ்சினத்திற்கு காதல் வழிவிட்டது.

5

கால்ம் ஓடிக்கொண்டிருந்தது. அங்குமிங்குமாக ஒடியாடி வேலை செய்த அன்னவடிவின் வயிற்றில் ஒரு திட்டைக் காட்டியது.

ஊரில், ஒலை வீட்டில் இருந்தாலும் திறந்த வெளியையும் பரந்த பூமியையும் அனுபவித்த அவளுக்கு ஆரம்பத்தில் அந்தக் குடிசையில் வசிக்க என்னவோ போலிருந்தது. நெருக்கித் தள்ளிய குடிசை வரிசைகளில் கால் நீட்ட இடமில்லாத மண் தளத்தில் கூனிக்குறுகிக் கிடக்கும் மக்களைப் பார்க்கப் பார்க்க இப்போது அவர்களை விட்டு அகலவே மனம் வரவில்லை. காலைக்கடனைக் கழிக்கக் காத்துக் கிடப்பதும், நீர் பிடிக்க பழிகிடப்பதும் பழக்கமாகிவிட்டது. கட்டிட வேலையில் சூப்பர்வைஸரை மாதிரி பல பேர்வழிகளின் நேர்வழியான கிண்டல்களையும் மறைமுகமான அழைப்புகளையுங்கூட அவளால் சகித்துக் கொள்ளும் அளவிற்குப் போய் விட்டது. கூட வேலை செய்யும் இதர பாட்டாளிகள் இருக்கும்போது, தனக்கு எதுவும் ஏற்படாது என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது. ஒரு தடவை அலுப்போடு தாயம்மாவிடம் சொன்னபோது, "ஆம்புள கிண்டல் பண்ணுணாத்தான் ஒரு பொண்ணு வெட்கப்படனும் இல்லன்னா துக்கப்படனும், இவனுக ஆம்புள வேடம் போட்டப் பொட்டப் பயலுவ. இவனுவளோட "பலா" சமாச்சாரத்த இவங்களோட சம்சாரங்ககிட்ட கேட்டாத் தெரியும் சேதி. சொந்தப்