பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஒருநாள் போதுமா?

குடிசைப் பகுதிகளில், இரண்டே முக்காலடி நீர் பெருகியது. ஆனாலும் மூன்றடி பெருகினால்தான், சர்க்கார் வரும் குடிசைகளில் ஒரு சாண் அளவிற்கு நீர் நின்றது. மக்கள், ஜன்னல் சுவரிலும், டிரங்க் பெட்டிகளிலும், வாசல் கதவை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். புதைமண் போன்ற சேரும் சகதியும்; தெருவில் படுத்தவர்கள், திண்ணையில் உட்கார்ந்தபடியே தூங்க வேண்டிய கட்டாயம்.

வேலை நின்றுவிட்டது. ஐம்பதும் போய்விட்டது. நல்ல வேளையாக, அந்தக் கட்டிட வேலை, மீண்டும் துவங்கிவிட்டது. அதைத் திறப்பதற்கு அமைச்சரோ அல்லது தலைவரோ தேதி கொடுத்து விட்டாராம். கல் வேறு அடிக்கப்பட்டு விட்டதாம். குறைந்தபட்சம், கட்டிடத்தின் முன்பக்கத்தையாவது முடிக்க வேண்டுமாம். மேஸ்திரி சொன்னதை வேலு சொன்னதும் தலைப்பிள்ளை பெறப்போகும் இயற்கை விதியால், அளவுக்கு மீறிய மசக்கையில் அல்லாடிய அன்னவடிவு. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு பாண்டுக்கூடையை எடுத்து வைத்துவிட்டு, கடப்பாரையை கணவனிடம் நீட்டினாள். நான்கு நாள் ஊத்துக்கோட்டைக்கு ஒரு லாரியில் வெளியூருக்கு கையாளாகப் போயிருந்த வேலு. அன்று காலையில்தான் திரும்பியிருந்தான். அப்போதுதான் மனைவியை தனிமையில் பார்க்கிறான். கையும் காலும் குறுகுறுத்தன.

அவள் தோளில் தன் வலது கையைப் போட்டபடியே "அன்னம் ஒட்காருமே" என்றான்.

"எப்போ ஒமக்கு இந்த மே வந்தது? எருமமாடு மாதிரி கூப்புடுற வேல வாணாம்."

"எப்போ ஒனக்கு வாணாம் வந்ததோ, அப்போ"

சூரியகாந்திப் பூப்போல அன்னவடிவு சிரித்தாள். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவன் அவளைச் சாய்வாக இழுத்தான்.

"இதுல்லாம் ராத்திரிக்கு, இப்போ வேலைக்குப் போறோம். போவும் போது."

"அது எனக்குத் தெரியாதாமே. தப்புத் தப்பு தெரியாதா பிள்ள? ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுக்கிறேன் வாங்கிக்க இல்லன்னா கொடு, வாங்கிக்கிறேன்."

"இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் நைட்ல."

"ஒனக்கு என்ன பிள்ள கஷ்டம்?"