பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஒருநாள் போதுமா?

எப்படியோ விவகாரம் பத்திரிகைகளுக்குப் போய்விட்டதால் நாயகத்தின் கம்பெனியான விநாயகம் லிமிடெட் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டதாம். அதாவது அந்தக் கம்பெனிக்கு காண்டிராக்ட் கொடுக்கப்படாது என்று தள்ளி வைக்கப்பட்டதாம். இதனை சிபாரிசு செய்தது. சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தணிக்கைக் கமிட்டியாம். ஆனால், பணபலமும், பிணபலமும் அதாவது பலரை பிணங்களாக்கும் பலம் அரசியல் செல்வாக்கும் கொண்ட அந்த மனிதர், தன் மகன் பெயரில் மூர்த்தி அண்ட் மூர்த்தியை துவக்கி நடத்துகிறாராம். எல்லோருக்கும் தெரியுமாம்.

ஆகையால், நாயகம் ஒரு மூட்டை சிமென்டும், ஐந்து மூட்டை மணலும் கலந்து போட வேண்டிய சுவர்பூச்சில், சிமென்டை பாதியாக்குவாராம், பீமிற்குள் ஒரு சிமென்ட் மூட்டை, இரண்டு மணல் மூட்டை, நான்கு முக்கால் இஞ்ச் ஜல்லிக் கலப்பதற்குப் பதிலாக, மண்ணைக் கூட்டி சிமென்டைக் குறைப்பாராம். கான்கிரீட் கலவைக்காக சட்டப்படி நான்கு பெட்டி ஜல்லியும், இரண்டு பெட்டி மணலும், ஒரு மூட்டை சிமென்டும் போட வேண்டும். என்றாலும், அவர் ஜல்லியையும் சிமென்டையும் சட்டமில்லாதபடி குறைப்பாராம். இதனால் அவர் வளர்ந்திருக்கிறாரே தவிர, குள்ளப்படவில்லையாம். அவரை மேய்க்கும் அதிகாரிகளோ அல்லது அவர் மேய்க்கும் அரசியல்வாதிகளே இதனால் கூடித்தான் போனார்களாமே தவிர, குறைந்து போகவில்லையாம். கொட்டுவதை என்ன விகிதத்தில், யார் யாருக்குக் கொட்ட வேண்டும் என்று தெரிந்த மனிதராம்.

இந்த நாயகம், சப்-கான்டிராக்டர், மேஸ்திரி மூலம் கான்டிராக்டர், கொத்தனார் மூலம் கான்டிராக்டர், மஸ்டர் ரோல், பீஸ்ரேட் என்று பல்வேறு விதவிதமான வகைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்பட்டதால், எந்த தொழிலாளியாவது விபத்துக்கு ஆளானால், அவருக்கு நஷ்ட ஈடு என்பது, குதிரைக் கொம்பாம். அந்தத் தொழிலாளியே பணமிருந்தால் செயற்கைக்கால் பொருத்திக் கொள்ள யோசனை கூறுவாராம். கண்ணிழந்த தொழிலாளிக்கு வேண்டுமானால் அந்தக் கண்ணை மறைக்க ஒரு கருப்புக் கண்ணாடி வாங்கிக் கொடுப்பாராம். அதுவும் கைரேகைப் படாமல் இருப்பதற்காக மேஸ்திரி மூலமாகக் கொடுத்து அனுப்புவாராம்.

இந்தப் பின்னணியில் எப்போதோ முன்னணிக்கு வந்த மூர்த்தி & மூர்த்தி லிமிட்டெட்டின் சார்பில், அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. கற்குவியல்களும், மண்குவியல்களும், சிமென்ட் குவியல்களும் சேர்ந்து கான்கிரீட்டாகி விட்டன. மோல்டுகள் பொருத்தப்பட்டுக் கொண்டிருக்க, சித்தாள் பெண்கள், பூச்சு வேலை