பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஒருநாள் போதுமா?

மட்டுமல்ல சொச்சம். மூட்டை ஒன்றுக்கு ரூ. 27.92 பைசா ரேட்டில் கிடைத்த சிமெண்ட் மூட்டைகளில் இருநூறு மூட்டைகளை இப்போது பட்டப்பகலில் நாற்பது ரூபாய் ரேட்டிற்கு பிளாக்கில் விற்பதற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டார். அவற்றை ஏற்றிப்போக லாரி வந்து விட்டது. லாரிக்கும் சிமெண்ட் ஸ்டோர் ரூமிற்கும் இடையேயுள்ள பாதை சமீபத்தில் பெய்த மழையால் புதை மண்ணாய் போய்விட்டது. வேலுவும் இன்னும் சிலரும் தலையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றியபடி மாறி மாறிப் போய் வந்து கொண்டிருந்தார்கள். இவற்றை லாரியில் ஏற்றிவிட்டு, டன்னுக்கு நாலாயிரம் ரூபாய் ரேட்டில் கிடைத்த எஃகு பாளங்களில் சிலவற்றையும் ஏற்ற வேண்டும்.

வேலு, மற்றவர்களைவிட வேகமாக இயங்கினான். அவர்கள் இரண்டு தடவை போய் வந்தால் அவனோ மூன்று தடவை போய் வந்துவிட்டான். காண்டிராக்டரின் மஸ்டர்ரோலில் சேர்ந்துவிட்ட ஆனந்தம் அவனுக்கு. படிப்படியாக முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை. அப்படி முன்னேறும்போது சகாக்களையும் கைதுக்கி விடவேண்டும் என்ற உறுதி.

குட்டி அறையில் இருந்து யதேச்சையாக வெளிவந்த நாயகம் வேலுவை விநோதமாகப் பார்த்தார். தயிர் மத்துப் போல் இயங்கிய அவன் கால்களைப் பார்த்தார். ஒரு மூட்டை சிமெண்டை அனாவசியமாகத் துக்கி, அதை ஆட்டுக்குட்டி மாதிரி தோளில் போட்டபடி தம் பிடித்த அவன் தோரணையைப் பார்த்தார். மூட்டையை துவளாமலேயே சுமக்கும் தோள்களைப் பார்த்தார். சுமை இருக்கும்போது மற்றவர்களைப் போல் பற்களைக் கடிக்காமல், நாடி நரம்புகளை வெளிப்படுத்தாமல் தோள்மாலை அணிந்தவன் போல் காணப்பட்ட வேலுவை பிளாக் செய்து தன் கம்பெனி முத்திரையாகப் போடலாம் என்பது போல் பார்த்தார். எல்லோரும் அவனைப்போல் இருந்தால், கால்வாசி ஆட்களை நிறுத்தி பணம் பண்ணலாமே என்று ஏக்கத்தோடு பார்த்தார். அப்படி நிறுத்தினால் எவ்வளவு பணம் தேறும் என்பதுபோல் மனதில் கணக்குப் போட்டார். கூட்டல் கணக்கல்ல, பெருக்கல் கணக்கு பிறகு தன் அந்தஸ்தையும் மீறி வேலையாட்களுடன் சுந்தரம் மூலமாகப் பேசும் நாயகம் இப்போது, சொந்தக் குரலில் பேசினார்.

"ஒன் பேரு என்னப்பா?" "வேலுங்க."

'வேல் மாதிரி பாயாண்டாமா? ஒன் உடம்புக்கு ரெண்டு மூட்டையைத் தூக்க வேண்டாமா? துக்கிப் பாரு பார்க்கலாம். ஏய் இவன்