பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஒருநாள் போதுமா?

இன்ஸ்பெக்டர் எந்தவித சலனமும் இல்லாமல் பேசினார். "என்ன நடந்தது?" பெயின்டர் பெருமாள் விளக்கினார். இன்ஸ்பெக்டர் தீவிரமாகச் சிந்திப்பதுபோல் முகத்தைச் சுழித்தார். பேப்பர் வெயிட்டை உருட்டினார். தோள்பட்டையில் மின்னிய ஸ்டார்களை ஊதிவிட்டுக் கொண்டார். பிறகு ஒரு காகிதத்தை எடுத்து இந்தாம்மா இதுல ஒரு கையெழுத்துப் போடு போடத் தெரியுமா? என்றும் கேட்டார். அவர் நீட்டிய காகிதத்தை ஒன்றும் புரியாமல் அன்னவடிவு பார்த்தபோது, ரைட்டர்,

இன்ஸ்பெக்டருக்குத் திருப்தி பிறகு ரைட்டரிடம் எதையோ சொன்னார். அவர், எதையோ சொல்லச் சொல்ல அவர் அதையே எழுதினார். எழுதியதில் கையெழுத்துப் போட்டு இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளிடம் நீட்டினார்.

வேலு என்ற பெயரிழந்த பிணத்தோடு போன டாக்ஸி. கான்ஸ்டபிளோடு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. யார் யாரிடமெல்லாமோ கையெழுத்து வாங்கினார்கள். அத்தனையும் முடிந்த பிறகு வேலு என்ற பிணம் பிணக் கிடங்கிற்குக் கொண்டு போகப்பட்டது. அவனைத் தூக்கும்போது மட்டும் அன்னவடிவு மெல்ல முனங்கினாள். "என் ராசா, காலையில்தான ஒனக்காக என்னை ஏங்க வைப்பேன்னு சொன்னியே அசையாம இருப்பேன்னு சொன்னே. அது மாதிரி ஆயிட்டே. ஆயிட்டே."

அன்னவடிவின் ஒப்பாரிக்கு ஒத்துப்பாட ஆஸ்பத்திரியில் யாருமில்லை. வாழ்நாள் முழுவதும் உழைப்புத் தவிர ஒன்றும் புரியாமல் போன ஒரு மனிதப் பிணத்திற்கு அங்கே மரியாதை இல்லை. மரியாதை

பிணத்தை வாங்கலாம் என்றார்கள். பிரியும் போது கான்ஸ்டபிள் கையைச் சொரிந்தார். பெயின்டர் பெருமாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் ந்குள் ஒரு ஐந்து ரூபாய் நோட்டைத் திணித்துவிட்டு ஓங்க த்துக்காகக் கொடுக்கல சார். ஒரு தொழிலாளி சாகும் போது ஒருவனுக்குக் கஞ்சி ஊத்துவான்னு காட்டுறதுக்காகத்தான் கொடுத்தேன் பேஷா வச்சுக்கோ' என்றபோது போலீஸ்காரர் சிரமப்பட்டார். வாங்கியதை வைக்கவும் முடியவில்லை. கொடுக்கவும் இயலவில்லை.

அந்தப் பிணத்தைப் போட்டுவிட்டு டாக்ஸி திரும்பியது. கான்ஸ்டபிள் இறங்கிக் கொண்டார். சிறிது நேரம் போனதும் பெயின்டர் பெருமாள் இறங்கப் போனார். சிறிது யோசித்துவிட்டு, கையில் இருந்த ஐம்பது ரூபாயை சித்தாள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, இன்ஸ்பெக்டர் அன்னவடிவான்னு கேட்டதில்