பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 131 இருந்தும், அவசர அவசரமாய் கையெழுத்து வாங்குனதில் இருந்தும் ஏதோ சூழ்ச்சி நடக்கிற மாதிரி தெரியிது வழில இறங்குன சுந்தரம் வரவே இல்லை. நான் நம்ம சங்கத்துக்குப் போயிட்டு வாரேன். அன்னவடிவை பத்திரமாய் இறக்கிவிடு. அன்னம், கவலைப்படாதேம்மா! நம்ம காலம் வாரது வரைக்கும் நமக்கு காலன் எப்போ வேணுமுன்னாலும் வரலாம் என்று சொல்லியபடியே கண்களைத் துடைத்தபடி நகர்ந்தார்.

அன்னவடிவு, வேலு கிடந்தது மாதிரியே சித்தாள் பெண் மடிமீது கிடந்தாள். நிலை குத்திய பார்வை மூச்சற்ற நிலைமை; ஏங்கி ஏங்கி விம்மும் மார்பு.

அந்தக் குடிசைப் பகுதிக்கு டாக்ஸி வந்ததும் எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். தாயம்மா வீட்டில்,சொல்ல முடியாத கூட்டம். அன்னவடிவை பல பெண்கள் கைத்தாங்கலாக இறக்கியபோது, எங்கிருந்தோ வந்தவன் போல் தாயம்மாவின் மகன் கோவிந்தன் ஓடி வந்தான். அன்னவடிவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அக்கா அக்கா. மாமா போனவரு வரமாட்டாருக்கா, நானு ஒன்ன கூடப்பிறந்த பெறப்பா கவனிச்சுக்கிறேன், அக்கா என்று சொல்லி விட்டு டாக்சியிலேயே தன் தலையை வைத்து மோதினான்.

அன்னவடிவு அந்த உடன்பிறவாப் பிறப்பை உற்றுப் பார்த்தாள். துக்கம், இயலாமை கரைகளை உடைத்து, வெள்ளப் பெருக்கோடு வெளிப்பட்டது. அவள் ஒப்பாரியாய் ஓலமிட்டாள்.

"என் ராசா என் சீமைத்துரையே ஒம்ம மச்சினன் சொல்லுறதை ஒருதடவை வந்து கேட்டுட்டுப் போவும். ஒரு தடவையாவது வந்துடும்! வரமாட்டீரா? வரமாட்டீரா?"

7

இரவு எட்டு மணி இருக்கும்.

காண்டிராக்டர் நாயகம் சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இன்னும் இரண்டு மூன்று பேர் ஸோபா செட்டில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தார்கள். வலதுகை'சுந்தரம் பெளவியமாக ஒரு நாற்காலி யில் சாயாமல், அதன் முனையில் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்து "அவ்வளவு ரூபாய் செலவாயிட்டா?" என்று நோட்டம் போட்டு நாயகம் கேட்டபோது, "நாங்க உள்ளே வரலாமா?" என்ற குரல் கேட்டது. பெயிண்டர் பெருமாளுடன் நான்கைந்து பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பெண். முப்பது வயதிருக்கலாம். கழுத்திலும்