பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஒருநாள் போதுமா?

காதிலும் அணிகலம் ஏதும் இல்லாதவள். அதுவே அவளுக்கு அணியாக இருந்தது.

நாயகம் அவர்களை உட்காரச் சொல்லுமுன்னாலேயே, அவர்கள் உட்கார்ந்தார்கள். பிறகு அந்தப் பெண் "நாங்க கட்டிடத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள்" என்று சொன்னபோது "அடடே அப்படியா?" என்று சொல்லிவிட்டு பிறகு "சுந்தரம், ஏதாவது காபி, கீப்பி வாங்கிட்டு வா" என்று கண்ணடித்துப் பேசினார். அதை அந்தப் பெண் கவனித்தாலும், கேட்கவில்லை. எப்படிக் கேட்பது? கண்ணடிப்பது அவர் உரிமை காபி வாங்கப்போவது அவன் கடமை. .

அந்தப் பெண் எடுத்த எடுப்பிலேயே பேச்சைத் துவக்கினாள். "இன்னைக்கு, ஒங்களிடம் வேலை பார்த்த வேலு இறந்ததுக்கு நஷ்ட ஈடு பற்றிப் பேச வந்திருக்கோம்."

விநாயகம் குழைந்தார். "மொதல்ல. காபி சாப்பிட்டுப் பேசலாமா?"

"இழவு நடந்திருக்கும்போது நாங்க எதுவும் சாப்பிட விரும்பல. வேலுவோட மனைவி கர்ப்பிணிப் பெண். இன்னும் இரண்டு மாதத்துல அவங்களால வேலை பார்க்க முடியாது. தகப்பன் இல்லாமப் பிறக்கப்போற பிள்ளைக்கு ஒருவழி பண்ணனும். அந்த அம்மா வாழறதுக்கும் ஒருவழி பண்ணணும்."

விநாயகம் சுழல் நாற்காலியில் இருந்து எழுந்து அவர்களுக்கு அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். பிறகு கண்களை எப்படியோ கலங்கவைத்துக் கொண்டார். தலையைக் கவிழ்த்துப் போட்டுக்கொண்டார். மெல்ல துக்கம் தாளாமல் விக்கிப் பேசினார்.

"ஓங்களுக்குப் பணம் வேணுமேன்னு கவலை. எனக்கு அநாவசியமாய் ஒரு உயிரு போயிட்டேன்னு கவல எப்படி வேல பார்க்கிற வாலிபன் தெரியுமா? நீங்க நம்புனாலும் சரி, நம்பாட்டியும் சரி, என்னால மத்தியானம் சாப்பிட முடியல. மனுஷன்னா அவனுல்லா மனுஷன், அந்தமாதிரி வாலிபனை இனிமேல் பார்க்கவே முடியாது."

"பார்க்கமுடியாதுன்னு எங்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்களும் துக்கம் தாங்க முடியாமல் தவித்து கட்டிட வேலை நடக்கறதப் பார்த்தாவது கவலய மறக்கலாமுன்னு எல்லாத் தொழிலாளிங்களையும் வேல பார்க்கச் சொல்லி இருப்பீங்க இதோ இப்போ கூட மின்சார வெளிச்சத்தில் பலர் வேல பாக்கிறாப்போல இருக்கு அதுகூட. வேலு செத்த கவலயில... ராத்திரிக்குத் தூக்கம் வராமத் தவிக்காமல்.