பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஒருநாள் போதுமா?

'ஏதோ பெண்ணாச்சேன்னு இரக்கப்பட்டுக் கேட்டால், ஒரேயடியாகப் பாயுறீங்களே! அவன் என்னோட எம்பிளாயி இல்ல. எந்த மேஸ்திரி கூட்டிட்டு வந்தானோ எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால், லட்சக்கணக்கான முதல் போட்ட என் வேல நின்னுப் போனதுக்கு செத்தவன்தான் நஷ்டஈடு தரணும். ஏதோ போனால் போகுது, இழவுச் செலவுக்கு நூறு ரூபாய் தர்மம் பண்ணலாமுன்னு நினைச்சால், ஒரேடியாய்க் குதிக்கிறீங்க ஒங்களால ஆனதைப் பாருங்க" "இதை எதிர்பார்த்துதான் நாங்க வந்தோம். எங்கே சந்திக்கலாமோ அங்கே சந்திக்கலாம்."

"ஊரில் இருக்கவன் எல்லாம் மாரடைப்பால் சாவான், அதுக்கெல்லாம் நான் பொறுப்பேற்கனுமா?"

"நாட்ல அரசாங்கம் இருக்குகுதுன்னு, ஒங்களுக்கு தெரியுமோ தெரியாதோ எங்களுக்குத் தெரியும். வேலு மாரடைப்புல சாகல: சிமெண்ட் மூட்டைய அளவுக்கு மீறி தூக்குனதால் கழுத்துப் பிசகி, தொண்டை நரம்பு அறுந்து இறந்திருக்கார். நாளைக்குப் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ல எல்லா சமாச்சாரமும் தெரியும். ஒங்க சுந்தரம், டாக்ஸியிலிருந்து இறங்கி உங்களிடம் கள்ளத்தனமாக போன் பேசியதும், நீங்க இன்ஸ்பெக்டருக்கோ அல்லது உள்ளூர் தலைவருக்கோ போன் போட்டதும் தெரியும். எங்க ஆட்கள் எல்லா இடத்துலயும் இருக்கிறதை மட்டும் மறந்துடாதீங்க."

"சரி, இப்போ என்ன பண்ணணுமுன்னு நினைக்கீங்க?" "அது உங்க கையில இருக்கு." "என் கையில இருந்து நயாபைசா புரளாது. வேணுமுன்னால் தர்மமாய்."

அந்தப் பெண் எழுந்தாள். அவளைத் தொடர்ந்து, கூட வந்தவர்களும் எழுந்தார்கள். நாயகம், பெயின்டரைப் பார்த்து நாளைக்கு வேலைக்கு வந்தால் ஒன் காலை ஒடிச்சுடுவேன்' என்று மிரட்டப் போனார். பிறகு இது சொல்லாமல் செய்ய வேண்டிய காரியம் என்று நினத்து, மழுப்பலாகச் சிரித்தபடி வழியனுப்பி வைப்பவர் போல் எழுந்தார்.

அந்தப் பெண்ணும், இதர ஆடவர்களும், வெளியே வந்தார்கள். அவள் பெயிண்டரைப் பார்த்து, நாங்க நேராய் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வெள்ளைக் காகிதக் கையெழுத்து விவகாரத்தைக் கவனிக்கப்