பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 135

போறோம். நீங்க அன்ன வடிவை டாக்ஸியில் கூட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க. சீக்கிரமாய் வாங்கோ" என்றாள்.

போலீஸ் நிலையத்தில், இரண்டு கான்ஸ்டபிள்களையும் ரைட்டரையும் தவிர, வேறு யாருமில்லை. லாக்கப்பில் நான்கைந்துபேர் வேர்க்க விறுவிறுக்க நின்றார்கள்.

படியேறி வந்தவர்களைப் பார்த்து, ரைட்டர், "ஒங்களுக்கு என்ன வேணும்?" என்றார் அதட்டலாக இப்போது அந்தப் பெண் பேசவில்லை. அவருடன் வந்த ஒரு இளைஞர் பேசினார்.

"நான் அட்வகேட், ஒங்க இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும். எப்போ வருவார்?"

"எப்போன்னு சொல்ல முடியாது. ஒங்களுக்குத்தான் தெரியுமே சிட்டில போலீஸ்காரன்பாடு. என்ன விஷயம்?"

"ஒண்னுமில்ல. மத்தியானம் புருஷனப் பறிகொடுத்த பெண் கிட்ட ஒங்க இன்ஸ்பெக்டர் துக்கம் விசாரித்தாராம். அதாவது ஒரு வெள்ளைக் கடுதாசில கையெழுத்து வாங்குனாராம் என்ன விபரமுன்னு கேட்க வந்தோம். இப்பத்தான் அவரு இல்லியே, நேரா கமிஷனர் கிட்டப் போகப் போறோம்."

ரைட்டர் யோசித்தார். தனிப்பட்ட முறையில், இன்ஸ்பெக்டர் நல்லா மாட்டிக்கிட்டான் என்று மகிழ்ந்தவர் போல் காணப்பட்டார். பிறகு வேலூரில் எடுத்த பயிற்சி நினைவுக்கு வந்து, இலாகா விசுவாசம் மேலோங்க "இருங்க, போன்ல செக்கப் பண்றேன்" என்றார்.

வந்தவர்கள் உட்கார்ந்தார்கள். ரைட்டர் எங்கேயெல்லாமோ தொடர்பு கொண்டார். கால் மணி நேரத்திற்குப் பிறகு "இதோ வந்து விடுவார், உட்காருங்க.." என்றார்.

"நிச்சயமாகவா?" என்றார் அட்வகேட். "நிச்சயமாய். கனமான பார்ட்டின்னு சொல்லியிருக்கேன்." "கனமான பார்ட்டின்னா? பார்ட்டிங்களெல்லாம் வித்தியாசமா? குற்றங்கள்ளதான் வித்தியாசம் இருக்கும்."

ரைட்டர் சங்கடத்தோடு சிரித்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஸ்பெக்டர் மோட்டார் பைக்கில் வந்து இறங்கினார். வேகமாக உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். பிறகு லாக்கப்பில் இருப்பவர்களைப் பார்த்து வேட்டியை இழுத்து நேராய்ப் போடேண்டா