பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஒருநாள் போதுமா?

சோமாறி" என்றார். ரைட்டரைப் பார்த்து, "அந்தப் பாவி எங்கேய்யா போயிட்டான்" என்று கத்தினார். ஒருவித பயப் பிரம்மையைத் தோற்றுவிக்கும் அந்தப் போலீஸ் டெக்னிக்கைப் புரிந்து வைத்திருந்த அட்வகேட் சிரித்தபடி, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அட்வகேட் என்றதும் இன்ஸ்பெக்டருக்கு சிறிது நாடி தளர்ந்தது.

"என்ன விஷயம் சார்?" "மத்தியானம் அன்னவடிவு என்கிற சித்தாள் பெண்கிட்ட வெள்ள காகிதத்தில் ஒரு கையெழுத்து வாங்கினிங்களாம். இதோ அந்தம்மாவே வந்துட்டாங்க."

டாக்ஸியில் இருந்து இறங்கிய அன்னவடிவை இரண்டு பெண்கள் கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டே வந்தார்கள். ஒருவர் தன் நாற்காலியில் இருந்து எழுந்தார். அன்னவடிவை கூடவந்த சித்தாள் பெண்கள் அதில் உட்கார வைத்தார்கள். அவள் அங்கு இருப்பவர்களையோ, தான் இருப்பதையோ கவனிக்காதது போல், சூன்யத்தைக் காட்டுவது போல் கண்கள் சுடரிழந்து தோன்ற, நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.

அட்வகேட், விஷயத்தோடு கேட்டார். "இந்தப் பாவப்பட்ட அம்மாவப் பாருங்க, இன்ஸ்பெக்டர் நீங்க கூட இப்படிக் கஷ்டப்பட்ட அம்மா வயித்துலேதான் பிறந்திருப்பீங்க. இந்த அம்மாகிட்ட வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கலாமா?"

இன்ஸ்பெக்டர் மழுப்பினார். "எனக்குத் தப்புப் பண்றதா தோணல. இந்தம்மா ஹஸ்பெண்ட் மாரடைப்பில் செத்துட்டதா பஞ்சாயத்தார் முடிவு பண்ணுனாங்க. அதை கன்பர்ம் பண்ண, கையெழுத்து வாங்குவேன். அது என் டூட்டி"

"டூட்டின்னா விஷயத்தை விளக்காமல் மொட்டக் கையெழுத்து வாங்கறதா?"

"அந்தம்மா இருந்த துக்கத்துல அவங்களுக்குத் தெரிஞ்சதையே சொல்லி மேலும் துக்கப்படுத்தாண்டாமுன்னு வாங்கினேன். மொதல்ல பிணத்த எடுத்து அடக்கம் பண்ணுங்க ஸார். அது ஒரு மனிதனோட பிணமுன்னு நினையுங்க மற்ற விவகாரம் அப்புறம்." இப்போது அந்தப் பெண் வெடித்தாள் "இந்த விவகாரத்துலதான் மற்ற விவகாரமே இருக்கு அந்தம்மா புருஷன் மாரடைப்புல சாகல: சிமெண்ட் மூட்டை பிடறி நரம்புல