பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 137

பட்டதுல இறந்துட்டார். இதுக்கு. நீங்க உதவாட்டாலும் உபத்திரவம் செய்யாமயாவது இருக்கணும்".

"நீங்க பேசறது நல்லா இல்ல மேடம்" "நீங்க வெறுங்காகிதத்தில் கையெழுத்து வாங்குனதுதான் நல்லா இல்ல. வேலுவை மாரடைப்புல இறந்ததாய் முடிவு பண்ணுன பஞ்சாயத்தார் கையெழுத்த நாங்க பார்க்கலாமா?

"நீங்க கேட்டதை எல்லாம் காட்ட முடியுமோ? எங்களுக்கும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு"

"நாட்ல எல்லாப் பிரிவுக்குமே இருக்கு. ஆனால் இந்தப் பாவப்பட்ட கட்டிடத் தொழிலாளருங்களுக்குத்தான் ஒன்றுமில்ல. அனாதையா உழைத்து, அனாதையா விழுந்து."

"இது என்னோட இலாகா இல்ல மேடம். தொழிலாளர் நலத்துறை கவனிக்க வேண்டிய விவகாரம்."

"ஒங்க இலாகாவையே நீங்க ஒழுங்காய் கவனிச்சால் போதும் சார். இதோ. இந்த இரண்டு லேடீஸும் விபத்து நடந்த இடத்துல இருந்திருக்காங்க. இதோ... இவர் பெயர் பெருமாள். இவரும் இருந்திருக்கார். இந்தப் பஞ்சாயத்தார் கிட்டேயும் கேளுங்க சார்."

"என்ன மேடம் இது? நாயகம் ஒரு பஞ்சாயத்தாரைச் சொல்றார், நீங்க ஒண்ணச் சொல்lங்க கடைசில எனக்குத்தான் பஞ்சாயத்து இல்ல. பேசாம மொதல்ல பிணத்த எடுத்து நல்லவிதமாய் அடக்கம் செய்யுறதை விட்டுப்புட்டு. நான் இதுல என்ன பண்ண முடியும்?"

"நீங்க என்ன பண்ணுறீங்களோ தெரியாது. நாங்க என்ன பண்ணுவோம் என்கிறதை மட்டும் சொல்லிடுறோம். நாங்க பயாப்லி ரிப்போர்ட் சரியா கிடைக்குமுன்னால பிணத்தை எடுக்கப் போறதில்லை. நாளைக்குக் கட்டிடத் தொழிலாளர் ஆயிரக்கணக்கில் இங்கே வந்து நியாயம் கிடைக்கும்வரை அமைதியாய் போராடப் போகிறோம். சாகும்வரைகூட உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம்."

இன்ஸ்பெக்டர் தீவிரமாக யோசித்தார். முன்விளைவுகளையும் பின்விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்தார். இறுதியில் "ஆல்ரைட் பயாப்லி ரிப்போர்ட் வரட்டும். அதன்படி ஆக்ஷன் எடுக்கலாம்" என்று சொல்லிவிட்டு ரைட்டரைப் பார்த்தார். அவர் வெள்ளைக் காகிதத்தை அவர்களிடம் காட்டிவிட்டுக் கிழித்துப் போட்டார்.

நிர்வாகிகளும் இதர தொழிலாளர்களும் அன்னவடிவை அனுதாபமாக நோக்கியபடியே காம்பவுண்டுக்கு வெளியே வந்தார்கள். திடீரென்று பெயிண்டர் பெருமாள் ஒரு யோசனை சொன்னார்.