பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

எல்லோருக்கும் பொதுவாகத்தான் பொழுது விடிந்தது. ஆனால், தினமும் விடியும் அந்தப் பொழுது அன்னவடிவுக்கு வேறு விதமாகத் தோன்றியது. கோழிகள் மாரடித்தன. குழாய்ச் சத்தம் ஒலமாயின. அந்தக் குடிசையே மயானமானது.

அன்னவடிவு நிலையிழந்ததால், நினைவு இழந்து, கிடந்தாள். சில பெண்கள் அவள் காதில் சுக்கு வைத்து ஊதினார்கள். ஒருத்தி, வலுக்கட்டாயமாக அவள் வாயில் கஞ்சியை ஊற்றினாள். இன்னொருத்தி, அவிழ்ந்த புடவையைக் கட்டி விட்டாள்.

அன்னவடிவு படுத்துத்தான் கிடந்தாள். எழுந்திரு பிள்ள என்று சொல்பவன் எழமுடியாமல் போய்விட்டான். 'என் ராசாத்தி நான்தான் ஒன்னை தூக்கி விடுவேனாம் என்று படுத்துக் கிடந்தவனை துக்கி விடுபவனைத் தூக்கி வர, ஆட்கள் போய்விட்டார்கள். டாக்டருங்க, கழுத்து பிசகனுதுலதான் இறந்திருக்கார் மாரடைப்பு கிடையாதுன்னு ரிப்போர்ட்ல எழுதியிருக்காங்களாம். நம்ம சங்கத்துக்கு பயந்துதான் டாக்டருங்க நியாயமா எழுதியிருக்காங்க. இந்த காண்டிராக்டர் பயல சும்மா விடப்படாது என்று வெளியே அடிப்படும் பேச்சு அவள் காதில் விழுந்தது. என்ன எழுதி என்ன செய்ய? என் ராசா போனவர் போனவர்தான். அவர ஆரால கொண்டு வர முடியும்?

நீர் கோர்க்கும் கண்களோடு, நினைவுகள் கலக்கும் நெஞ்சோடு அவள், நெடுஞ்சாண்கிடையாய் கிடந்தபோது, ஒருவர் உள்ளே வந்தார். முதலில் பிளாட்பாரத்தில் அவளையும் அவள் கணவரையும் உதறிவிட்டபடி நடந்தாரே அந்த உள்ளுர் மாமாதான் - நாயகத்தின் நண்பர். விவகாரம் பெரிதாகலாம் என்பதை இன்ஸ்பெக்டர் நடுநிலையோடு இருக்க விரும்புவதில் இருந்து புரிந்து கொண்ட நாயகம், அன்னவடிவுக்கு சொந்தக்காரர் யாராவது உண்டா என்று ஆய்வு செய்தார்.

நல்ல வேளையாக, அன்னவடிவின் மாமாவே அவருக்கு நண்பர். பலவிதத்தில் பிளாக் மார்க்கெட்டுகளில் இருந்து பிராஸ்டிடுட்டுகள் வரைக்கும் இருவருக்கும் உறவுண்டு. கோர்ட்டுக்கு வேலுவின்

விவகாரம் போனால் கள்ளத்தனமாக சிமெண்ட் மூட்டைகளை