பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஒருநாள் போதுமா?

'பிளாக்கில் விற்றது வெளிச்சத்துக்கு வரலாம். நாயகம் பயந்து நண்பரை நாடினார். இந்த நண்பருக்கும் ஒரு ஈடுபாடு நாயகத்திடம் இருந்தது. பிளாக்கில் சிமெண்ட் வாங்கி, டார்க் பிளாக்கில் விற்கும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அந்த லாரியில் விழுந்த மூட்டைகளில் இருபது இவருடைய வீட்டிற்குள் இருக்கிறது. விவகாரம் தனக்கும் தலைவலியாகிவிடக் கூடாதென்று. அவர் உபதேசியாகவும் உபகாரியாகவும் வந்தார்.

அன்னவடிவு, தலையைத் தூக்கி அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் தன் தலையை தரையில் போட்டபோது, அவர் பக்குவமாகப் பேசினார். அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி, தேள் கொட்டுவதுபோல சூள்கொட்டிப் பேசினார்.

"விஷயத்தைக் கேள்விப்பட்டதும் மாமாவுக்கு கையும் ஒடல காலும் ஒடல. ஒன்னை எப்படி தேத்துறதுன்னும் புரிய மாட்டக்கு நேரா அந்த நாயகத்துக்கிட்டே போனேன். நாயப் பேசுனது மாதுரி பேசினேன். "யாரோட பிள்ளன்னு நினைச்சடா? கோர்ட்டுக்கு என் மருமகள் வரமாட்டாள். நான்தான் வருவேன்னு மிரட்டுனேன். பயந்துட்டான். ஆயிரம் ரூபாய் கொடுத்துடுறேன். விஷயத்த விட்டுடுங்கன்னு கெஞ்சினான். அதோட ஒன்னத் தூண்டி விடுறவங்க தின்னிப் பயலுவ. ஒன்னை ஏவிவிட்டு அதுல பணம் பண்ணப் பாக்காங்க. அதனால நாயகமும் யோசிக்கான். ஆயிரம் ரூபாய் தந்துடுவான். ஆனால் ஒரு கண்டிஷன். நீ இந்த மெட்ராஸ்ல இருக்கப்படாதாம். ஒன்ன இந்தப் பயலுவ தூண்டிக்கிட்டே இருப்பாங்கன்னு பயப்படுறான். அவன் சொல்றதும் நியாயம் மாதுரிதான் எனக்குப் படுது."

அன்னவடிவு, தலையை சிறிது உயர்த்தி, சுவரில் சாய்ந்தபடி அவரையே பார்த்தாள். மாமாவுக்கு மகிழ்ச்சி. சிறிது சத்தம் போட்டே பேசினார்.

நம்ம நிலையையும் யோசிக்கணும். நீ அறியப்பொண்ணு.சின்னஞ்சிறு வயசு நாயகம் பொல்லாதவன். அடியாள் வச்சிருக்கான், பணம் வச்சிருக்கான். ஒன்னைக் கொலை பண்ணிவிட்டால். கொலைகூட பரவாயில்லை. எங்கேயாவது தூக்கிட்டுப்போய் ஏதாவது பண்ணிவிட்டால் மாமாவால தாங்க முடியுமா? இல்லன்னா இருபத்து நாலு மணிநேரமும் ஒனக்குக் காவலுக்குத்தான் இருக்க முடியுமா? உன் இஷ்டம். பணம் வேணுமுன்னால் இப்பவே மாமா தாரேன். அப்புறமாய் அவன்கிட்ட வாங்கிக்கிறேன். என்ன சொல்றே? நாமும் காலத்த அனுசரித்து நடந்துக்கணும் பாரு என்ன சொல்றே?