பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஒருநாள் போதுமா?

அரைமணி நேரத்திற்குப் பிறகு அங்குமிங்குமாக வந்து போன கூட்டத்தில் பெயிண்டர் பெருமாள் வந்தார். அவள் எழுந்திருக்கப் போனபோது அவளைப் படுத்துக்கொள்ளும்படி கையசைத்தார். பிறகு எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு தழுதழுத்த குரலில் பேசினார். "ஒன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேச வந்தேன் அன்னம். இந்தச் சமயத்துல பேசறது தப்புத்தான் என்ன பண்றது, ஏழை எளியவங்களால கால நேரத்தப் பார்க்க முடியாது. தக்கபடிதான் நாம நடந்துக்கணும்".

"ஒன்னோட சொந்தக்காரர் வந்து ஒனக்கு ஆயிரம் ரூபாய் தாரதாய் சொன்னதாய்க் கேள்விப்பட்டேன். விட்டுப் பிடிச்சால் ரெண்டாயிரமும் கிடைக்கும். நாட்ல அனாதையா இருக்கிறவங்க கட்டிடத் தொழிலாளர்களும் விவசாயக் கூலிகளுந்தான். இதுல நம்ம பொழப்பு சர்க்கஸ் பொழப்பு. நமக்கு இஎஸ்.ஐ. ஆஸ்பத்திரி இல்ல. அப்படி இருந்தா, இருந்தால் தாயம்மா அப்படி ஆகியிருக்கமாட்டாள். நமக்குன்னு சரியான சட்ட திட்டம் இல்ல. வேலைக்குத் தக்கபடி நாம இயங்கணும். நமக்குத் தக்கபடி வேலை இயங்காது. சம்பளத்துலயும் விதிமுறை இல்ல. காண்டிராக்டருக்குத் தக்கபடி ரேட்டு. வாரத்துல நாலு நாளைக்கு வேல இல்ல. ஒன் புருஷன் மாதுரி விபத்துல இறந்தால் கேட்க நாதியில்ல. நாய் இறந்தாக்கூட கார்ப்பரேஷன் புதைக்கும். ஒடம்பை விற்கிற தாசியை விட உழைப்பை விற்கிற நம்ம பிழைப்பு மோசமான பொழப்பு"

"இந்தப் போக்குக்காகத்தான் சங்கம் வச்சோம். ஒன் புருஷனோட சாவுல காண்டிராக்டர், சப்-காண்டிராக்டர், சர்க்கார் எல்லோருமே சம்பந்தப்பட்டிருக்கு இப்போ டாக்டருங்களும் விபத்துல இறந்ததாய் எழுதிட்டாங்க. நாங்களே காண்டிராக்டரை மிரட்டி உருட்டி நஷ்ட ஈடு வாங்கித் தந்துடலாம். அது பெரிய காரியமல்ல. ஆனால் இது ஒரு முன்னுதாரண கேஸாய் இருக்கதுனால. லேபர் கோர்ட்ல போய் வழக்கு போடலாமான்னு நினைக்கோம். இதுல ஒரு நல்ல தீர்ப்புக் கிடைச்சால் பலருக்குப் பலன் கிடைக்கும். எந்தத் தொழிலாளி குடும்பமும் அனாதையாகாது. ஒருவேளை கேஸ் தோற்றுப் போய்விட்டால் மேலும் பலமா போராடலாம்; விடப்போவதில்லை.

சங்கம் எடுத்த முடிவைத்தான் ஒன்கிட்ட சொல்றேன். நாங்களே மறியல் செய்து ரெண்டாயிரம் மூவாயிரம் ஒனக்கு வாங்கித் தரட்டுமா? இல்ல லேபர் கோர்ட்டுக்குப் போகலாமா? இதுல ஒன் இஷ்டம் தான் முக்கியம். ஒனக்கு எந்த வகையிலும் உதவத் தயார். மறியலா, கோர்ட்டான்னு நீதான் உத்தரவு போடணும். இன்னொன்றையும்