பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

திடீரென்று ஒரு பரப்பரப்பு. பெண்கள் கூப்பாடு போட்டார்கள். கோவிந்தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான். அன்னவடிவு நிமிர்ந்து பார்த்தாள். முகமோ அல்லது உடம்பின் எந்த பகுதியோ தெரியாதபடி வெள்ளை வெள்ளையான கட்டுக்களோடு பிணம் வந்தது. உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் அறுக்கப்பட்டு, அப்புறம் தைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிணத்தை எடுப்பதற்கு தொழிலாளிகள் கிட்டத்தட்ட அறுபது ரூபாய்வரைக்கும் அழுதார்களாம். மனிதாபிமானம், அறுபது ரூபாய்க்கு மேல் விற்கப்படவில்லை.

வேலு, மூலையில் சாத்தி வைக்கப்பட்டான். பெண்கள் ஒலமிட்டார்கள். வாய் நிறையச் சிரித்து. ஒவ்வொருவரையும் அக்கா என்றும் தங்கச்சி என்றும் பாட்டி என்றும் வயதுக்குத் தக்கபடி அழைக்கும் அந்த வாலிபன், வயதாகும் முன்னாலேயே இறந்துவிட்ட சோகத்தில் எல்லாப் பெண்களும் தாய்மையின் தவிப்பால், தாங்கள் பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்தது போல் புலம்பினார்கள்.

அன்னவடிவால் எழுந்திருக்க முடியவில்லை. கைகளை ஊன்றியபடி தவழ்ந்தாள். உடனே இரண்டு மூன்று பெண்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போய் பிணத்தின் அருகே வைத்தார்கள். அவள் வீறிட்டுக் கத்தினாள்.

"என் ராசா உன்னை உயிரோட இருக்கையிலே உடம்பு முழுவதும் வெள்ள வேட்டியும் வெள்ளைச் சட்டையுமா இந்தப்பாவி அழகு பார்க்கலேன்னு நினைச்சு. ஆஸ்பத்திரிக்காரங்க உன்னை சிங்காரிச்சு விட்டிருக்காங்களோ? வாழும்போது மொட்டயா இருந்த ஒனக்கு, செத்தபிறகு சிங்காரமா? இந்த சிங்காரத்தப் பார்க்கவா, நான் பட்டணம் வந்தேன்! அய்யோ, என் ராசாவோட முகத்தை மறைக்கிற கட்டுக்கள எடுங்களேன்! யாராவது எடுங்களேன்! என் ராசாவோட - என் வைரக்கட்டியோட மொகத்த ஒரு தடவையாவது பாத்தாகணும்."

அவளுக்கு என்ன தெரியும்? அந்தக் கட்டுக்களை அவிழ்த்தால் கண்களும் மோவாயும் நெற்றியும் தனித்தனியாக விழும் என்பதை