பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 145

அந்தப் பேதைக்கு எப்படிச் சொல்வது? எல்லோரும் தயங்கினார்கள். அன்னவடிவு, அவன் முகம் மறைத்த கட்டுக்களை ஆவேசத்தோடு அவிழ்க்கப் போனாள். தடுக்கப் போனவர்களை அடிக்கக்கூட போனாள். பிறகு பிணத்தோடு பிணமாக மயங்கிச் சாய்ந்தாள். யாரோ சோடா என்றார். எவளோ 'சுக்கு என்றாள். அன்னவடிவோ உடைந்துபோன சோடா பாட்டில் சிதறல்கள்போல, சுக்கு நூறான சுக்குத்துண்டுகள் போல, பிணத்தின் மேல் சாய்ந்தபடி கிடந்தாள்.

தேர் வந்து விட்டது. பூமாலைகள் தொங்கவிடப்பட்டன. மேளதாளத்தையும், சிலம்பக் கம்பங்களையும், தொழிலாளர்கள் வேண்டாமென்று தடுத்து விட்டார்கள். யாரோ ஒருத்தி "இந்தத் தேர் திரும்பி வரும். ஆனால், வேலு அண்ணன்." என்று விட்ட இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் அழுதபோது, அத்தனை பெண்களும் அழுதார்கள். பெயின்டர் பெருமாளுக்கும் மயக்கம் ஏற்பட்டது. ஒரு தூணில் தன்னையிழந்து சாய்ந்து கிடந்தார். கோவிந்தன் அழுகையால் விழுங்கப்பட்டவன்போல், உழைத்து உழைத்து. சிறுநீரகங்களின் உழைப்பு நின்று உழலும், தன் தாயின் மரணத்திற்கு அழுகையை சேமித்து வைக்க நினைத்தவன்போல், பைத்தியக்காரன் போல் கூட்டத்தைப் பார்த்தபடி நின்றான்.

ஆயிரக்கணக்கில் திரண்ட சங்க உறுப்பினார்கள்- கட்டிடத் தொழிலாளர்கள், தத்தம் கிளைச் சங்கங்களின் சார்பில், வேலு என்ற முன்னாள் தொழிலாளிக்கு மாலை போட்டார்கள். அந்தப் பிணத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தட்டில் யாரும் சொல்லாமலே இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். நாணயங்கள் விழுந்து விழுந்து, துங்காமல் தூங்குபவனை துயில் களைய முற்படுவதுபோல் தோன்றியது.

வேலு, ரதத்திற்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்த சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டான். எளியவர்கள் சாகும்போதுதானே இப்படிப்பட்ட இருக்கைகளில் உட்காரமுடியும்? உட்கார்த்தி வைக்கப்பட்டவனைப் பார்த்து ஆண் பெண் அத்தனை பேரும் ஓலமிட்டனர். அன்னவடிவு தவிர அத்தனை பெண்களும் அழுதார்கள். தேர் நகர்ந்து கொண்டிருந்தது. தெருவே நகர்வது போன்ற தோரணை தெரு முழுவதையும் மூடி மறைத்த மக்களின் மெளன ஊர்வலம். ஆலயத்தின் உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்லும் தேருக்குப் பின்னால் போகும் உண்மையான பக்தர்கள்கூட, இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த சவ மூர்த்தியை ஏற்றிச்