பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 3

"ஒண்ணுமில்லப்பா. போய் வா." "போனால் வரணும். வந்தால் போகணும். இது எனக்குத் தெரியாதா.. எரிந்து விழாமல் கேட்கிறேன். சும்மாச் சொல்லு."

"நாங்க வந்து மூணு மாசமாகுது. ஒன் தங்கச்சிக்கு இன்னும் ஒரு வேலை வாங்கி."

சரவணன், அம்மாவைப் பார்க்காமல், மேஜையைத் துடைத்த வசந்தாவைப் பார்த்தான்.

"வசந்தா. நேற்று பேப்பர்ல. ஒன்னைப் பொறுத்த அளவுல ஒரு முக்கியமான விஷயம் வந்தது. என்னன்னு சொல்லு பார்க்கலாம்."

"வந்து. வந்து. கமலஹாசன் இந்திப் படத்துல. ஸாரி. இன்சாட் பி."

"இன்சாட்-பீன்னா என்ன..? ஹாசன் நிலையமுன்னா என்ன..? சொல்லு பார்க்கலாம்."

வசந்தா, அண்ணனைப் பார்க்க முடியாமல், அம்மாவைப் பார்த்தாள். அவன் கத்தினான்.

தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் விளம்பரம் பார்க்கல? குரூப் திரீபரீட்சை வைக்கப் போறதாய் வந்த விளம்பரத்தைப் படிக்கலியா? அப்புறம் மத்திய அரசோட ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ஒரு அட்வர்டைஸ்மென்ட் போனவாரம் போட்டங்க யூனியன் சர்வீஸ் கமிஷன்ல, செகரட்டேரியட்

கத்தரிச்சு ஒன்கிட்டே கொடுத்தேன். அப்ளை பண்ணிட்டியா?

வசந்தா, அண்ணனுக்கு நெருக்கமாகப் பதில் சொல்வது போல் வந்து, தன்னையறியாமலே அம்மாவின் முதுகுப் பக்கம் போய் நின்று கொண்டாள். அம்மாக்காரிதான் சமாளித்தாள்.

"வசந்தாவுக்குப் பரீட்சை எழுதவே பிடிக்கலியாம். நீ நினைச்சால்." "இவள் பரீட்சை எழுதிப் பாஸாகணும். உழைப்பால் வேலை வாங்கணும். அப்பத்தான் முடியும். வேற வழியும் கிடையாது. சிபாரிசுல கிடைக்கிற வேலைங்க ரொம்ப ரொம்பக் குறைவு. அதுவும் டெம்பரரியாய்தான் கிடைக்கும். அதுக்காக. கண்டவன் கிட்டல்லாம் என்னால பல்லைக் காட்ட முடியாது."

"இருந்தாலும். நீ. நினைச்சால்."

"என்னம்மா உளறுறே. என் தங்கைக்கு நல்ல வேலையா கிடைக்கக் கூடாதுன்னு நான் நினைப்பேனா? போனவாரம் பேங்க்