பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வேரில் பழுத்த பலா

இன்டர்வியூவிற்குப் போயிருந்தாள். இவள் படித்த பாடத்துலயே. ஐ.எம்.எப். லோன் பற்றி கேள்வி கேட்டாங்களாம். இவள் கடன்காரி மாதிரி விழிச்சாளாம். ஏய் வசந்தா... இங்கே வா. ஒனக்கு. காம்பெட்டிஷன் மாஸ்டர் வாங்கித் தந்தேன். அதைப் படிக்காட்டாலும், புரட்டியாவது பார்த்தியா? பதில் சொல்லு"

"இன்னும் படி.." நான் இன்னும் படிக்கத்தான் போறேன். கல்லூரிக் கல்வி, அறிவுலகத்தை மூடியிருக்கும் கதவின் சாவிதான்னு எனக்குத் தெரியும். தெரியுறதாலதான். இப்பவும் இரவில் பல பொது அறிவுப் புத்தகங்களை, இலக்கியங்களைப் படிக்கிறேன். இப்போ முக்கியம் நானல்ல. நீதான். இன்னும் நீ ஏன் படிக்கல.? பாத்தியாம்மா ஒன் மகளோட லட்சணத்தை? இவள் படிச்சால், அறிவு வளர்ந்திருமேன்னு பயப்படுறாள். இவள் பி. காம். படிப்புன்னு பேரு. கோல்ட் ஸ்டாண்டர்டைப் பற்றிக் கேட்டால் தெரியாது. சினிமா நடிகர் நடிகைகளோட லேட்டஸ்ட் காதல் ஸ்டாண்டர்டுகளைப் பற்றிக் கேட்டால், பட்டுப்பட்டுன்னு பதில் சொல்வாள். நான் ஒருத்தன். ஒனக்கு. நான் சொல்றதுல்லாம் புரியும் என்கிறது மாதிரி பேசுறேன் பாரு."

"ஆமாம். ஒனக்கும் நான் இளக்காரமாப் போயிட்டேன்." "ஒனக்கு ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல. அண்ணன் சொல்றதை ஏன் கேட்க மாட்டேக்கேன்னு ஒன் செல்ல மகளைக் கேட்கறியா? சரிதான். ஒங்க மேல இளக்காரமாய் நான் இருந்திருந்தால், கிராமத்துலயே வயலுல புரள்றதுக்கு விட்டிருப்பேனே. எதுக்காக இங்கே மெட்ராஸுக்கு கொண்டு வரணும்? இவள் என் மேற்பார்வையில் இருக்கணும். நீயும், அண்ணியும், இனிமேலும் வயல் வேலைக்குப் போகப்படாதுன்னுதானே. நான், போட்டிப் பரீட்சை எழுதித் தேறி. வேலைக்கு வந்தேன். வேலைக்குன்னு பேனாவைத்தான் தொட்டேன். எவன் காலையும் தொடல. இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்டமுடியும். கூடவே நடக்க முடியுமா?"

முத்தம்மாவுக்கு மகனின் அக்கறை அரைகுறையாகப் புரிந்தது. கண்களை மூடி மூடி திறந்தாள். பிறகு "நீ எரிந்து விழாமல் கேட்பேன்னு சொன்னதாலதான் கேட்டேன்" என்றாள்.

"நான் இப்போ என்ன எரிந்தா விழுறேன்? இவள் தன்னையே எரிச்சுக்கப்படாதேன்னுதான் பேசுறேன். நான் படிக்கும்போது, இப்போ அவளுக்கு இருக்கிற வசதியும், வழி காட்டுறதுக்கும் ஒரு ஆள் எனக்கு இருந்திருந்தால். இந்நேரம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாய் இருப்பேன். சரி. நான் போறேன்."