பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வேரில் பழுத்த பலா

அவள் உதடுகள் துடித்தன. ஊர்ல. இருக்கும் போது, ஒங்க அம்மா. இப்டி என்னைப் பேசினதில்லப்பா. இப்போ மெட்ராசுக்கு வந்த பிறகுதான் அவங்களோட போக்கே மாறிட்டு. நான் இங்கே 'வந்தட்டின்னு நினைக்காங்க. நான் இந்த வீட்ல வேலைக்காரி மாதிரிதான் இருக்கணுமுன்னு நினைக்காங்க. அவங்க மட்டுமா நினைக்காங்க. ஏதோ ஒன் முகத்துக்காக, என் முகத்தை அப்பப்போ துடைச்சிட்டு இருக்கேன். என்று எப்படிச் சொல்வது?

ஈரம்பட்ட இதயமே கண்ணிற்கு வந்தபடி, படபடத்து, முன்புறமாய் நின்ற சரவணன், பின்புறமாய் திரும்பிச் சீறினான்.

"ஒனக்கு மூளை இருக்குதா அம்மா. இதே அண்ணி, நான் காலேஜுக்கு போறதுக்காக, வீட்டில் இருந்து புறப்படும்போது எதிர்ல வந்து இந்தா என் பங்கு. அம்பது ரூபாய்னு தருவாங்களே அப்போ மட்டும் ஒன் கண்ணு குருடாய் இருந்ததா? ஒரு காலத்துல. ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இல்லாமல், ஒருத்திக்கு ஒருத்தன்தான்னு வச்சாங்க. அப்போதான் குடும்பங்கள் சிதறாமல் இருக்குமுன்னு நினைச்சாங்க. இதுக்காக, அதாவது தொண்ணுறு குடும்பம் சிதறாமல் இருக்கதுக்காக பத்து குடும்பத்துல புருஷனை இழந்தவங்களுக்கு வெள்ளைச் சேலை கொடுத்தாங்க... ஒரு போர்ல, வீரர்களையும் பலி கொடுத்து ஜெயிச்சாங்களே அது மாதிரி, குடும்ப முறையோட வெற்றிக்காக இவங்கள மாதிரி. ஒன்னை மாதிரி பெண்களைப் பலி கொடுத்தாங்க.

நீங்களும் குடும்பக்கட்டு குலையாமல் இருக்கிறதுக்காக, மனக்கட்டை விடாமல் பிடிச்சிங்க போர் வெற்றிக்காக சாகிறவங்களுக்கு நடுகல்னு வச்ச சமூகம் குடும்பக் கட்டோட வெற்றிக்கு சாகாமல் செத்தவங்களை, சாகாமல் சாகடிச்சாங்க. இது என்ன நியாயம்? அப்போ வெள்ளைப் புடவை இப்போ கறுப்பு புடவையாய் மாறிட்டு. சில இடத்துல கலர் புடவையாயும் ஆகுது. நீ இன்னும் பழைய காலத்துலயே இருக்கிறே. நான் ஒருத்தன். இதையெல்லாம் தெரியாத ஒன்கிட்ட போய் பேசுறேன் பாரு. வசந்தா. நான் சொன்னது அம்மாவுக்குப் புரியாது. ஒனக்குப் புரியுமுன்னு நினைக்கேன். அண்ணி. இப்படி வாங்க அட."

சரவணன், அண்ணியின் கையைப் பிடித்து இழுத்து - பிறகு அவற்றைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அம்மாவை, மீண்டும் கோபமாய் முறைத்தபடியே வெளியேறினான்.