பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 17

போய்விடக்கூடாதே என்ற பயம். பழையபடியும் ஊருக்குப் போய். அப்பாவிடமும், சித்தியிடமும் அகப்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம், இவ்வளவுக்கும் அவள், பார்வைக்கு பயப்படுபவள் போலவோ, பயமுறுத்துபவள் போலவோ தோன்றவில்லை. பவுடர் தேவையில்லாத முகம். அழகு என்பது சிவப்பில் மட்டும் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் கறுப்பு. சிரிக்கும்போது மட்டுமே, சில பெண்களுக்கு, கண்கள் எழிலாய் இயங்கும். அவளுக்கோ, பேசும்போதுகூட பொங்கும் விழிகள், உடையால் மட்டுமல்ல, உடம்பாலும் தெரியாத வயிறு. எவருடனும் அதிகமாகப் பேசாத வாய், யார் சொல்வதையும் சிரத்தையோடு கேட்கும் காதுகள். பம்பரமாய் இயங்கும் கரங்கள். அடுத்த மெமோ வந்தால் ஆபத்தாச்சே என்பதுபோல், உள்ளே இருந்த சரவணனை, துஷ்ட தேவதையைப் பார்ப்பதுபோல், பார்த்துப் பார்த்துப் பயந்து கொண்டாள் அன்னம்.

உள்ளே உமா நின்று கொண்டிருந்தாள். வெளியே, தான் அரட்டையடித்ததைப் பார்த்துவிட்ட அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் மனதில், ஏதாவது கோபம் உதித்திருக்கிறதா என்பதை ஆழம் பார்ப்பதற்காகப் போனவள்.

அடுத்த பதவியுயர்வு உமாவை, அக்கெளண்டண்ட் இருக்கையிலோ அல்லது தலைமைக் கிளார்க் இருக்கையிலோ உட்கார வைக்கும். அதற்கு ஆபீஸ் தலைவிதியான அந்தரங்கக் குறிப்பேட்டை எழுத வேண்டியவன் இந்த சரவணன். இப்போது அவளுக்கு, அவன், தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான்- எப்படி எப்படி நினைக்க வேண்டும் என்பதே முக்கியம். எத்தனை நாளைக்குத்தான் ஈஸ்வரன் கழுத்தைச் சுற்றிய கடிக்காத பாம்பாகக் கிடப்பது? பதவியுயர்வு பெற்று. தனியாய் படம் எடுக்க வேண்டாமா..? பக்குவமாக, பதட்டப்படாமல் கேட்டாள்.

"ஸார். ஏதாவது டிக்டேஷன் கொடுக்கிங்களா.." "இப்போ இல்லே." "அப்போ அந்த ஸ்டேட்மென்டை அடிக்கட்டுமா?" 'யெஸ். அன்னத்தை, டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரோடு வரச் சொல்லுங்க."

உமா, குலுக்கலோடு போனாள். அவள் சைகைக்கு ஏற்ப அன்னம் உதறலோடு வந்தாள். கைக்குழந்தையை மார்பில் அணைத்தது போல், ஒரு ரிஜிஸ்டரை மார்போடு சேர்த்து அணைத்தபடி வந்தாள். 'எதுக்காக இவன் என் பிராணனை எடுக்கான்? போயும் போயும் ஒரு