பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 19

அன்னம், பதில் சொல்ல முடியாமல் திணறியபோது, உமா உள்ளே வந்து சீல் போட்டு, ரகசியம் என்று கொட்டை எழுத்துக்களில் சுட்டிக் காட்டிய ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு, அன்னம் போவதற்காகக் காத்திருந்தாள். சரவணன் தொடர்ந்தான்.

"மிஸ் உமா. நீங்க அப்புறமாய் வாங்க. உம். அன்னம். சொல்லுங்க.."

அன்னம் மருவினாள். உமா மட்டும் மிஸ் உமாவாம் நான் வெறும் அன்னமாம். அவளால் பதிலளிக்க முடியவில்லை. அவன் சொல்வது உண்மையே. அவளால் உண்மையை ஒப்புக்கொள்ள முடிந்தது. ஆனாலும் ஆட்டுவித்த உண்மையின் பின்னணியை சொல்லத்தான் அவளால் முடியவில்லை. அவனை, பயந்துபோய் பார்த்தபோது, அவன் அதட்டினான்.

"இனிமேலும். சொல்றதுக்கு மாறாகச் செய்திங்கன்னால். அப்புறம் நான் சொல்றதைக் கேட்க. நீங்க இந்த ஆபீஸ்ல இருக்க மாட்டிங்க, யு கேன் கோ நெள."

அன்னம், அரண்டு மிரண்டு போவதுபோல் போனாள். வாசல் பக்கம் நின்றபடி, அவனையே பார்த்தாள். வேலைக்கே உலை வைப்பான் போலுக்கே. அப்புறம் சித்தி, வீட்ல சரியாய் உலை வைக்கலைன்னு அவமானமாய் திட்டுவாளே. அன்னம், நின்ற இடத்திலேயே நின்றாள். 'கான்பிடன்ஷியஸ் கவரைப் பார்க்கப்போன சரவணன், அன்னத்தை நிமிர்ந்து பார்த்தான். அவள் இன்னும் போகாமல் இருப்பதில் ஆச்சரியப்பட்டு, அவளைத் தன்னருகே வரும்படி சைகை செய்தான்.

"எதுவும் சொல்லணுமா?" "வந்து வந்து. மெமோ. இன்னும் எனக்கு புரபேஷன் பீரியடே முடியல..."

"என்னாலே. ஒங்க வேலைக்கு ஆபத்து வராது. அதே சமயம். நீங்க இனிமேலும் ரிஜிஸ்டரை. ஆர்டினரியாக்கினால், நான் எக்ஸ்ட்ராடினரி நடவடிக்கை எடுப்பேன்."

அன்னம் பயந்துவிட்டாள். சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லியே தீரவேண்டும்.

"ஸ்ார். லா.ஸா."

"என்ன. சொல்லுங்க."

"ஹெட்கிளார்க் அம்மாதான் ரிஜிஸ்டர்ல வேண்டாம். சாதாவா அனுப்புன்னு சொன்னாங்க. அஸிஸ்டென்ட் டைரக்டர் சொல்றாரேன்னு