பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வேரில் பழுத்த பலா

சொன்னேன். பக்கத்துல நின்ன ஏ ஒ ஆபிஸ்ருங்க ஆயிரம் சொல்லுவாங்க... ஒனக்கு இமிடியட் பாஸ் ஹெட்கிளார்க்தான். சொல்றைதைச் செய்னு சொன்னாரு. அவங்களும், தபால் தலைங்க அதிகமாய் ஆகுதேன்னு தான் சொன்னாங்க."

சரவணன், எழுந்திருக்கப் போகிறவன்போல், நிமிர்ந்தான். ஆச்சரியம், முகத்தில் தாண்டவ மாடியது.

"என்னம்மா நீங்க... மெமோ கொடுக்கும் போது இதைச் சொல்லியிருக்கலாமே. நான் ஒங்கள களிமண்ணுன்னுல்லா நினைச்சுக் கொடுத்தேன்."

"நான் களிமண் இல்ல கிராஜுவேட்" "நீங்க களிமண்ணு இல்லன்னு ஒத்துக்க மாட்டேன். என்கிட்ட ஏன் இதைச் சொல்லல?"

"எப்படி ஸார். காட்டிக் கொடு. கொடுக்கது?" "இப்போ மட்டும் சொல்றீங்க? "இனிமேல் சொல்லாட்டால் வேலைக்கே. ஆப."

சரவணன், அப்போதுதான் அவளை ஒரு பொருட்டாகப் பார்த்தான். தேறாத கேஸ் என்று அவன் தள்ளி வைத்திருந்த அவள் மனம் எவ்வளவு விசாலமாய் இருக்குது இதுபோல் மூளையும் அழுத்தமாய் இருந்தால், எவ்வளவு அருமையாய் இருக்கும். மனமும், மூளையும் வடமிழுக்கும் போட்டி போல் ஒன்றை ஒன்று தன்பக்கம் இழுக்கப் பார்க்கும் காலமிது. மூளைக்காரர்கள், இதயத்தை மூளையிடம் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு இதய நோயை ஏற்படுத்துகிறார்கள். விசாலமான இதயக்காரர்கள், மூளையை சுத்தமாக வைக்கிறார்கள். பேலன்ஸ் இல்லாத மனிதர்கள். மனிதச்சிகள்.

சரவணனும். அவளை பேலன்ஸ்' இல்லாமல் பார்த்தான். அறிவுபூர்வமாகப் பார்க்காமல், இதயப்பூர்வமாகப் பார்த்தான். இவள் அரட்டையடித்துக் கேட்டதில்லை. எவரையும் ஒரு மாதிரி பார்ப்பதைப் பார்த்ததில்லை. லேட்டாக வந்ததில்லை. இந்த அலுவலகத்தில் தன்னிடம் வந்து மற்றவர்களைப் புறம் பேசாதவர்களே கிடையாது. ஆனால் இவள்.

"எங்கே படிச்சீங்க?"

"மதுரையில். காலேஜ்ல."

"நீங்க கிராஜுவேட்டா..."