பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 21

"எக்னாமிக்ஸ்ல, ஹை செகண்ட் கிளாஸ் ஸார்." "ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எழுதித்தானே வந்தீங்க?" "ஆமாம், ஸார். யூ.டி.ஸியாய் செலக்ட் ஆனேன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே."

"யூடிஸியாய் சேர்ந்திருக்கீங்க. அப்புறம் ஏன் இந்த டெஸ்பாச்சை கட்டிட்டு அழுகிறீங்க? ஏன்னு. சொல்லுங்க."

"இதத்தான் கொடுத்தாங்க." "நீங்க கேட்கலியா." "கேட்டேன். கோட்டாவுல வாரவளுக்கு கொட்டேஷன் வராதுன்னு சொன்னாங்க."

"ஐn. நீங்களும் வேலையை தெரிஞ்சுக்க விரும்பல." "கேட்டுப் பார்த்தேன். சொல்லிக்." "நான் மெமோ கொடுத்தேனே. அந்த ஆபீஸ் காபியை ரிஜிஸ்டர்ல எழுதச் சொன்னாங்களா? ஒங்க கிட்டே கையெழுத்து வாங்கினாங்களா?."

"ஆமாம் ஸார்." "என்ன? என்ட்ரி போட்டாங்களா? கையெழுத்தும் வாங்குனாங்களா? யூஸ்லெஸ்."

"ஆமா. யார். எதுக்காக." "ஒண்ணுமில்ல. நீங்க போகலாம்." அன்னம், தயங்கித் தயங்கி நடந்தாள். யூஸ்லெஸ் என்றாரே. சீ என்றாரே... யாரை? யாரைச் சொல்றார். என்னைத்தான். என்னையேதான்.

சரவணன், காலிங் பெல்லை அழுத்தினான். ஓடிவந்த பியூனிடம், "ஹெட் கிளார்க்கையும், ஏ.ஓ.வையும் அன்னத்தோட பெர்சனல் பைலோட வரச்சொல்லுங்க.." என்றான்.

சரவணன் அந்தக் கான்பிடன்ஷியல் கவரைப் பிரிக்கப் போனான். 'இப்போ அவங்க வருவாங்க. அப்புறம் படிக்கலாம். என்ன பெரிய கான்பிடன்ஷியல். அந்தரங்கக் குறிப்பேடாய் இருக்கும். இல்லைன்னா. செக்யூரிட்டி ஏற்பாடு எப்படின்னு கேட்டிருப்பாங்க.

நிர்வாக அதிகாரி செளரிராஜனும், தலைமை கிளார்க் பத்மாவும் ஜோடியாக வந்து, ஜோடியாகவே உட்கார்ந்தார்கள். அவருக்கு ஐம்பது