பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 23

சொல்றதையாவது செய்யணும். நாலு லெட்டருங்களையும் ரிஜிஸ்டர்ல அனுப்பச் சொன்னீங்க. ஆர்டினரியாய் அனுப்புறாள். செளநா மார்ட் கம்பெனிக்காரன், டைரக்டருக்கு ஏதாவது புகார் கொடுத்து, அதுல. 'என்னோட குறைகளைச் சுட்டிக் காட்டி ஒரு லெட்டர் கூட வரலனு எழுதினால். நீங்கதான் மாட்டிக்கனும். அதனாலதான் யோசித்தேன்." திடீரென்று பத்மா உதடுகளைக் கடித்தாள். அவள் முதுகை நிர்வாக அதிகாரி பிராண்டுவதையும் சரவணன் கவனித்தான். கோபத்துடன் கேட்டான்.

"நீங்க பெரியவங்க எனக்காக யோசித்ததுல மகிழ்ச்சி. அதை என்கிட்டேயும் முன்னாலேயே சொல்லி இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்."

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பது புரியாமல் பத்மா விழித்தபோது, செளரிராஜன் சமாளித்தார்.

"இப்போ என்ன ஸார் வந்துட்டு. இதோ நானே கிழிச்சுடுறேன்."

"நோ. நோ. நான் இன்னும் ஒரு முடிவுக்கு வர்ல. போகட்டும். அன்னத்தோட அபீஷியல் டிஸிக்னேஷன் என்ன?"

"யு.டி.ஸி. கோட்டாவுல வந்தவள்."

'ஐ.ஸி. அப்புறம் அக்கெளண்ட் செக்ஷனில் இருக்கிற சந்தானத்தோட டிஸிக்னேஷன்?"

"எல்.டி.ஸி.”

"ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் வந்தாரா?"

"வர்ல. ஆனால் வேலையில் சூரன். நாலு வருஷமாய் டெம்பரரியாய் இருக்கான். நாமதான் ஏதாவது."

"நான்கு வருஷமாய். எல்டிஸி வேகன்ஸி இருக்குதுன்னு ஆபீஸ்ல இருந்து, கமிஷனுக்குத் தெரியப்படுத்தலேன்னு நினைக்கிறேன்."

"ஆமா ஸார். அப்படி எழுதுனால், பாவம் சந்தானத்துக்கு வேலை போய்விடும். இன்னும் ஒரு வருஷம் தள்ளிட்டால். டிபார்ட்மெண்டுக்கு எழுதி. ரெகுலரைஸ் செய்திடலாம்."

"குட். செய்யனும். அப்புறம் இந்த அன்னத்துக்கு வேற செக்ஷன் ஏதாவது கொடுத்தீங்களா..?

"அதுக்கு ஒரு இழவும் தெரியாது ஸார். டெஸ்பாட்சையே சரியாய் பார்க்கத் தெரியல்ல."