பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 2

"அன்னம் கோளாறுயில்ல. ஆபீஸ்தான் கோளாறு. நானும் ஏழைக் குடும்பத்துல, ஹரிஜனங்களோட மோசமான பேக்ரவுண்டில் வந்தவன். எனக்குத் திறமை இருக்குதுன்னு நீங்க ஒத்துக்கிட்டால். அன்னத்திடமும் அடையாளம் காணாத திறமை இருக்குமுன்னு நீங்களே ஒத்துக்கப் போlங்க. ஓ.கே. ஆபீஸ் ஆர்டர் இஷ்ஷ பண்ணுங்கோ. நான் இன்றைக்கே எப்படியும் கையெழுத்துப் போட்டாகணும். அன்னத்தோட பெர்சனல் பைல் இங்கேயே இருக்கட்டும்."

அலிஸ்டெண்ட் டைரக்டராக ஆவதற்கு ஆசைப்பட்ட செளரிராஜனும், அவரது இதயத்தில் இடம் பிடித்திருப்பதுபோல், அவர் இப்போது அமர்ந்திருக்கும் நாற்காலியையும் பிடிக்க நினைத்த பத்மாவும் பயந்து போனார்கள். அவர்களின் அந்தரங்கக் குறிப்பேடுகளில் கை வைத்து விட்டால்..?

"இந்த அன்னம் திமிர்பிடிச்ச சேரிக்கழுதை. இந்த கிறுக்கன் கிட்டே என்னவெல்லாமோ சொல்லிக் கொடுத்திருக்காள். இருக்கட்டும். இருக்கட்டும். எத்தனை நாளைக்கு இந்த சரவணன் ஆட்டம்? இதோ.. இந்தக் கவரை உடைச்சுப் பார்த்தாமுன்னால், தெரியும். ஒரேடியாய் உடையப் போறான். அணையப்போற விளக்கு கொழுந்துவிட்டு எரிகிறது மாதிரி குதிக்கான்.

செளிராஜனும், பத்மாவும் கொந்தளிப்போடு போனபோது, சரவணன் அந்த ரகசிய உறையைக் கிழித்து, ரகசிய ரகசியமான கடிதத்தை அம்மண மாக்கினான். விடுநர் முகவரியைப் பார்த்து, நெற்றி சுருங்கியது. படிக்கப்படிக்க உதடுகள் துடித்தன. கண்கள், உடனடியாக எரிந்தன. தொண்டைக்குள் ஏதோ ஒன்று பூதாகாரமாய் மேலும் கீழும் நகர்வது போலிருந்தது. ஏதோ ஒரு சுமை, ஆகாயத்தில், இருந்து எழுந்து அவன் தலையை அழுத்தப் பற்றியது போலிருந்தது. எதிர்பாராத அதிர்ச்சி எண்ணிப் பார்க்க முடியாத கடிதம். அவனின் மூன்றாண்டு கால அலுவலக அனுபவத்தில், இப்படி ஒரு கடிதம் மற்றவர்களுக்கு வந்ததாகக் கூட அவன் அறிந்ததில்லை.

சரவணன், தன்னையறியாமலே எழுந்தான். எவரிடமாவது சொல்லியாகவேண்டும். கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். பிறகு குறுக்கும் அந்த அறைக்குள்ளேயே நெடுக்குமாய் அலைந்தான். மீண்டும் இருக்கையில் உட்கார்ந்து, அந்தக் கடிதத்தை எடுத்தான். துஷ்டி ஒலைபோல் வந்த அதையும் கிழிக்கக்கூடப் போனான். வாய் பின்னி விரிந்தது. கைகள் பின்னி. ஒன்றை ஒன்று நெரித்துக் கொண்டன.

திடீரென்று இரண்டு பேர் வந்து, உள்ளே நுழைகிறார்கள். தன்னையும். சமூக நெறிகளையும் தேடிக் கொண்டிருந்த அவன்