பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 27

“ஏதோ ஊர்க்காரனாச்சேன்னு வந்தோம். ஒனக்கு இப்போ.. எங்கே கண்ணு தெரியும்?"

சரவணன் வெடித்தான்.

"நீங்க என்னமோ. நான் ஊர்ல பட்டினி கிடக்கும் போது. தானம் செய்தது மாதிரியும், நான் அதுல படிச்சுட்டு, இப்போ நன்றி இல்லாதது மாதிரியும் பேசுறீங்க... ஊருக்கு எத்தனையோ தடவை வந்திருக்கேன். ஒங்க ரெண்டு பேர்ல.. யாராவது 'எப்போ வந்தேன்'னு கேட்டிருப்பீங்களா? நல்ல விஷயங்களுக்கு வந்தால் செய்யலாம். ஒங்க அயோக்கியத் தனத்துக்கு நான் உடந்தையாக இருக்க முடியுமா? அப்புறம் வேற எதுவும் விஷயம் உண்டா? நான் இப்போ பிஸியாய் இருக்கேன்."

ஊரிலிருந்து வந்தவர்கள், வாயடைத்துப் போனார்கள். பிறகு, சிறிதுநேரம் கடித்துக் குதறுவது மாதிரியாக அவனையே பார்த்துவிட்டு, இருவரும் சேர்ந்தாற்போல், வாசலுக்குள் நுழைந்து, அப்புறம் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். சிறிது நேரம்வரை, தன்னை மறந்த சரவணனுக்கு, அப்போதுதான் நிலைமை புரிந்தது. அவர்கள் அயோக்கியர்கள்தான். ஏழை பாளைகள் வயிற்றில் அடிப்பவர்கள்தான். ஆனாலும், இவர்கள் பேச்சே இப்படித்தான். இவர்களை இப்படிப் பேசி அனுப்பியிருக்கக் கூடாது. சொன்ன கருத்தையே, வேற மாதிரி சொல்லி இருக்கலாம். எனக்கு. என்ன வந்தது? இன்றைக்கு என்ன வரணும்? இந்த லெட்டரைவிட வேற என்ன வரணும்.?

சரவணன், நாற்காலியில் சாய்ந்து கொண்டான். சில சமயம் கோபத்தால் அதன் நுனிக்கு வந்தான். பின்னர், உணர்வுகளை கட்டுப்படுத்தியபடியே மீண்டும் நாற்காலியில் அப்படியே சாய்ந்து கொண்டான். திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு, அந்தக் கடிதத்தைப் படித்தான். பல, தற்செயலான சம்பவங்கள் அவன் மனத்தில் நிழலாடின. எல்லாம் திட்டமிட்டு எழுதப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. செளரிராஜன் சொல்லச் சொல்ல. இந்த பத்மா எழுதியிருப்பாள். அவன் கையெழுத்துப் போட்டிருப்பான். வெளியே மனித நேயர்களாய் சிரித்தபடியே, உள்ளுக்குள் ஓநாய்த்தனத்தை மறைத்துக் கொள்ள இவர்களால் எப்படி முடிகிறது? சீ. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்ற பாரதியார் பாடலைத்தான், இவர்களுக்குப் பாடிக் காட்டனும். அப்போவும். பாட்டைக் கேட்டதுக்குக் கூலி கேட்கும் ஜென்மங்கள்.

சரவணன், நிதானப்பட்டான். கால்மணி நேரம் நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். இது போராடித் தீரவேண்டிய பிரச்சினை. அறிவை