பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வேரில் பழுத்த பலா

ஆயுதமாகவும், நேர்மையைக் கேடயமாகவும் வைத்து, இரண்டில் ஒன்றைப் பார்க்க வேண்டிய பிரச்சினை. கடைசியில் ஆபீஸ் பியூன்கள் அடைக்கலமும், சிதம்பரமும் கூட காலை வாரிவிட்டதுதான் அவனுள் தாளமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன், கால்மணி நேரம், நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். பிறகு, பியூன்களை வரவழைத்தான்.

"கூப்பிட்டீங்களாமே ஸார்." "சிதம்பரம். ஒங்களுக்கு ஞாபகம் இருக்குதா. மூன்று மாதத்துக்கு முன்னால, என் குடும்பத்தோட தட்டுமுட்டுச் சாமான்களை. ரயில்வே நிலையத்தில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு டெம்போ எங்கே பிடிக்கலாமுன்னு ஒருத்தருக்கு போன்ல கேட்டேன். உடனே, அடைக்கலம் குறுக்கே வந்து, நம்ம காண்டிராக்டர் கிட்டயே, டெம்போ இருக்குது. தூக்கிட்டு வாடான்னு சொன்னால் வாரான்னு சொன்னது ஞாபகம் வருதா?

"ஞாபகம் இருக்குது ஸார். நல்லாவே இருக்குது."

"உடனே நான், கம்பெனிக்காரன் சமாச்சாரம் வேண்டாம். வேற கம்பெனியைப் பாருங்கன்னு சொன்னேனா. இல்லியா?"

"ஆமாம் ஸ்ார். சொன்னிங்க." "அப்புறம். சிதம்பரம் கைல நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து. டெம்போவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். நீங்க ரெண்டுபேரும் சாமான்களை இறக்கிப் போட்டுட்டு. மறுநாள் என்கிட்டே 14 ரூபாய் 70 பைசா மிச்சமுன்னு நீட்டினிங்க. நான், உடனே ஒங்களையே அந்தப் பணத்தை வச்சுக்கச் சொன்னேன். இல்லையா?"

"ஆமாம் ஸார்." "சரி. இப்போ எனக்கு ஒண்னு தெரியணும். எந்தக் கம்பெனி டெம்போவை ஏற்பாடு செய்தீங்க? சொல்லுங்க அடைக்கலம்."

“வந்து வந்து. பேர் மறந்துபோச்சு ஸார்." "நான் சொல்றேன். காண்டிராக்டர் டெம்போவை எடுத்துட்டுப் போனீங்க. இல்லையா? தலையைச் சொறியாதீங்க. சொல்லுங்க."

"ஆமாம் ஸார்." "ஆனால், அவருக்கு டெம்போ சார்ஜ் கொடுக்கல. ஆபீஸருக்குத் தானேன்னு. அவரும் சும்மா இருந்துட்டார். இல்லையா?"

"நான். நான் கொடுக்கத்தான் செய்தேன் ஸார். அவரு. வாங்கமாட்டேன்னுட்டாரு..."

"இதை என்கிட்ட சொன்னீங்களா? 14 ரூபாய் எழுபது பைசான்னு. கணக்காய் வேற கொடுத்தீங்க.."