பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வேரில் பழுத்த பலா

"அக்கெளண்டண்ட், மிஸ்டர் ராமச்சந்திரனையும் கூட்டிட்டு வாங்கோ. மிஸ் உமா. நீங்களும் வாங்க."

செளரிராஜன், ராமச்சந்திரன், உமா ஆகியோர் வந்து உட்கார்ந்தார்கள். சரவணன், அவர்களை ஏற்ற இறக்கமாகப் பார்த்துவிட்டு, அந்த ரகசியக் கடிதத்தை உமாவிடம் கொடுத்தான். "சத்தமாய் படிக்கணும். அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துப் படிங்க." என்றான்.

உமா அந்தக் கடிதத்தை அதற்குள்ளேயே மனப்பாடம் செய்துவிட்டு, "அட கடன்காரா." என்றாள். பிறகு கடிதத்தைப் படித்தாள். ஆங்கில வாசகம். அதன் அர்த்தம் இதுதான். "பேரன்புமிக்க டைரக்டர் அவர்களுக்கு, உங்கள் சென்னை கிளை அலுவலகத்திற்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, குறித்த நேரத்தில், குறிப்பிட்ட எழுதுபொருள் சாமான்களை ஒப்பந்த அடிப்படையில் எம் கம்பெனி கொடுக்கிறது. இதில் கம்பெனிக்கு லாபம் இல்லையானாலும், அரசாங்கத்துடன் தொடர்பு வைக்கும் வாய்ப்பிற்காக, இந்தப் பணியை செய்து வருகிறோம். இப்போது இருக்கும் உதவி டைரக்டர் திரு. சரவணனைத் தவிர, இதற்கு முந்திய அதிகாரிகள். எங்களை வாயால்கூட குறை கூறியது கிடையாது. இது இப்படி இருக்க, அடுத்த காண்டிராக்டிற்கும் எம் கம்பெனியின் கொட்டேஷன்தான் மிகக் குறைந்தது. ஆனால் திரு சரவணன், எங்கள் கம்பெனி கொடுத்ததைவிட, ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கேட்டிருக்கும் "சவுண்ட் ஸ்டேஷனரி கம்பெனியை சிபாரிசு செய்திருக்கிறார்.

திரு சரவணன் எம் கம்பெனிமேல் காட்டமாக இருப்பதற்குக் காரணம் உண்டு. நாங்கள் முறைகேடாக எதுவும் செய்து பழக்கமில்லாதவர்கள். திரு. சரவணன், மூன்று மாதத்திற்கு முன்பு, எமது டெம்போ வண்டியைக் கேட்டார். வண்டியை அனுப்பினோம். பில், எண் 616. நகல் இணைக்கப்பட்டுள்ளது. டெம்போ வண்டியின் லாக்புக் எக்ஸ்டிராக்டும் வைக்கப்பட்டுள்ளது பில்லை அனுப்பினோம். ஆனால், திரு சரவணன் உதவி டைரக்டர் என்ற ஆணவத்தில், பணம் கொடுக்காதது மட்டுமில்லாமல், எங்களைப் பார்க்க வேண்டிய சமயத்தில் பார்க்கவேண்டிய விதத்தில், பார்த்துக் கொள்வதாக மிரட்டியதைக் கூட நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. பணத்தையும் வசூலிக்கவில்லை. இப்போதுதான் அவரது மிரட்டல் புரிகிறது. அவர், எம் கம்பெனிக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டி, நான்கு தடவை கடிதங்கள் எழுதியதாகச் சொன்னது சுத்தப் பொய்; இதைத் தவிர. அவரிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். அவர் சிபாரிசு செய்திருக்கும் சவுண்ட்