பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வேரில் பழுத்த பலா

சரவணன் மெளனத்தைக் கலைத்தான். 'இப்போ.. எனக்கு அந்தக் கம்பெனிக்காரன் பெரிசில்ல. எனக்குத் தெரிய வேண்டியது. நாம் தலைமை அலுவலகத்துக்கு ரகசியமாய் அனுப்பியதாக நம்பப்படும் கடிதத்தோட விவரங்கள், அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான். எந்தக் கம்பெனியை சிபாரிசு செய்தோம், என்கிறதும், அந்தக் கம்பெனியோட ரேட்டும் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. நாலு தடவை போட்ட லெட்டரும் வர்லேன்னு அந்த சத்தியேந்திரன் எழுதியிருக்கான், போகட்டும். நாம் ஹெட் ஆபீஸுக்கு எழுதின லெட்டர், ஒங்க மூன்று பேருக்கும், எனக்குந்தான் தெரியும். நான் சொல்லியிருக்க முடியாது. யார் சொன்னது? ஆபீஸ் ரகசியம் வெளியில் போவது ஒரு nரியஸ் சம்ாச்சாரம்."

இந்த மூவரும் சீரியஸாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் சரவணனைப் பார்த்துவிட்டு, மற்ற இருவரையும் பார்த்துக் கொண்டார்கள். நான் இல்லே. ஒரு வேளை. இவங்க இரண்டு பேருமாய் இருக்கலாம். இறுதியில் மலையைக்கூட வாய்க்குள் வைக்கும் திறன் கொண்டவர் போல் தோன்றிய செளரிராஜன் சாவகாசமாய் சொன்னார்.

"ஸார். இந்த ஆபீஸ் ஒரு குடும்பம்." 'தப்பு. குடும்பம் மாதிரி இருக்கணுமுன்னு சொல்லுங்க. இது இப்போ குடும்பமில்ல. மிருகங்கள் குடும்பம் குடும்பமாய் திரியுற காடு." "எப்படியோ. நீங்க நினைக்கது மாதிரி இங்கே யாரும் காட்டிக் கொடுக்கிறவங்க கிடையாது. ஒரு வேளை, ஹெட் ஆபீஸ்ல எந்தப் பயலாவது. இந்த மொள்ளமாறி செளமிப் பயலுக்குக் காசுக்கு ஆசைப்பட்டு சொல்லியிருக்கலாமே. செளமி நாராயணனோட சட்டகர் ஒருத்தர் டெப்டி டைரக்டராய் வேற இருக்கார்"

"சரி. அக்கெளன்டன்டும், நிர்வாக அதிகாரியும் செய்த சிபாரிசு வரைவை அடிச்சுட்டு, உதவி டைரக்டர் எதேச்சதிகாரமாய் எழுதியிருக்கார் என்கிறான். நீங்க எழுதின விவரம் மேலிடத்திற்குத் தெரியாது. சட்டப்படி தெரிய முடியாது."

செளரிராஜன் உடம்பை நெளித்தார். "யார் ஸார் கண்டா? நான் இல்ல. அவ்வளவுதான் சொல்ல முடியும். நம்ம பியூன்கள் லேசுப்பட்டவங்கல்ல." "பியூன்களுமுன்னு சொல்லுங்கோ." "பகவான் அறியச் சொல்றேன். நான் சொல்லியிருந்தால் என் நாக்கு அழுகிடும்."