பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வேரில் பழுத்த பலா

ஒரு மணி நேரம் கழித்து ரிஜிஸ்டர்கள் வந்தன. ஒவ்வொன்றாய் புரட்டினான். ஒரு விவரமும் இல்லை. அவனே, வெளியே வந்தான்.

"அந்தக் கம்பெனியோட டெலிவரி வீட்டுகள் எங்கே?" அக்கெளண்டண்ட் பதிலளித்தார். "அதுதான். டெலிவரி ரிஜிஸ்டர் இருக்குதே ஸார்." "அவர் கொடுத்த தேதியை நீங்க தப்பாய்ப் போட்டிருக்கலாம். நான் அதை செக்கப் பண்ணணுமே. கமான். கொடுங்க. அதுங்கள்ல தானே கான்டிராக்டர் கையெழுத்து இருக்கும்."

ராமச்சந்திரன் உளறிக் கொட்டினார்.

"தேடுறேன். கிடைக்கல ஸார்.ஒருவேளை ரிஜிஸ்டர்ல என்ட்ரி போட்டாச்சேன்னு கிழிச்சுப் போட்டுட்டேனோ என்னவோ."

"லுக் மிஸ்டர் ராமு. டெலிவரி பேப்பருங்க, ரிஜிஸ்டரைவிட முக்கியம். அது இல்லாட்டால் அவன் செல்றதுதான் வேதவாக்கு நீங்க அப்படி கிழிச்சிருந்தால் நீங்க சஸ்பெண்ட் ஆகவேண்டிய நிலை வரும். புரியுதா? இன்னும் ஒரு மணிநேரம் டயம் கொடுக்கிறேன். அப்புறம் நீங்க அந்தக் கம்பெனிக்கு, பார்ட் டைமிற்குப் பதிலாய் நிரந்தரமாய் போயிடுவீங்க."

சரவணனை, இதரப் பிரிவுக்காரர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நிர்வாக அதிகாரியே அசந்து விட்டார். ஆடிப் போவான் என்று நினைத்தால், ஆட்டிப் படைக்கிறான் ராமச்சந்திரன், அதுல பார்ட் டைமில் இருக்கது இவனுக்கு எப்படித் தெரியும்? எல்லாம் அதோ இருக்கானே, குத்துக்கல்லு மாதிரி தங்கமுத்து. அவன்தான் சொல்லியிருப்பான்.

அன்னத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அடடே. இந்த ஆளுக்கு, என்னைத்தான் விரட்டத் தெரியுமுன்னு நினைச்சேன். எல்லாரையும் விரட்டுறாரு. இந்த அக்கெளண்டண்டுக்கு வேணும். ஒரு தடவை, கொஞ்சம் சொல்லிக் கொடுங்க ஸார்னு நான் கேட்டதுக்கு அவ்வளவு பகிரங்கமாவா கற்றுக் கொடுக்க முடியுமுன்"னு அசிங்கமாய் கேட்ட பயல். அப்போ, இந்தக் கிழட்டு செளரியும் எப்டிச் சிரிச்சான்? ஆமாம், அலிஸ்டெண்ட் டைரக்டர் ஏன் இப்படிக் கத்துறாரு? என்ன வந்துட்டு அவருக்கு?

எல்லோரையும் பார்த்த சரவணன், தன்னைப் பார்க்காமல் போனதில், அன்னத்திற்குக் கொஞ்சம் வருத்தம்தான்.