பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 35

சரவணன், தனது அறைக்குப் போய், இருக்கையில் கைகளை ஊன்றாமல் அப்படியே உட்கார்ந்தான். சிறிது நேரம், நாற்காலியிலேயே முடங்கிக் கிடந்தான். அப்புறம், ஒவ்வொரு ரிஜிஸ்டராக, ஒவ்வொரு பேப்பராக படித்துப் படித்து, குறிப்பெடுத்துக் கொண்டான்.

மதிய உணவு நேரம், வெளியே எல்லோரும் கும்பல் கும்பலாய் கூடிப் பேசினார்கள். அன்னம், தனது டிபன் கேரியரை எடுத்து, பியூன் சிதம்பரத்துடன் பகிர்ந்து கொண்டாள். ஒருவருக்கொருவர் பிடிக்காத அலுவலர்கள் கூட, ஒருவரை ஒருவர் பிடித்தபடி பேசிக் கொண்டார்கள். தலைமைக் கிளார்க் பத்மா என்றால், உமாவுக்கு வேப்பங்காய். இப்போதோ, அவள் கன்னத்தை ஆப்பிள் மாதிரி தடவியபடியே பேசினாள். செளரிராஜன், கொடுரமாகச் சிரித்துக் கொண்டார். நடுங்கிக் கொண்டிருந்த அக்கெளண்டண்டைப் பார்த்து, தைரியமாய் இருக்கும்படி சைகை செய்தார். இது, யோக்கியன் பயப்பட வேண்டிய காலம் நீ பயப்பட வேண்டாம் என்று அவன் காதில் போடப் போனார். பிறகு. அவனும் கொஞ்சம் பயந்து, தன்னிடம் சரணாகதியடையட்டுமே என்ற ஆசையில், அந்த ஆசாமியை கண்டுக்கவில்லை.

சரவணன், டிபன் காரியரைத் திறக்கவில்லை. டெலிவரி ரிஜிஸ்டர், பேமென்ட் ரிஜிஸ்டர், பெனால்டி ரிஜிஸ்டர் என்று பல ரிஜிஸ்டர்கள். இன்னும் ஒன்றைக் காணோம். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. துள்ளிக் குதித்து வெளியே வந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த செளரியின் அருகே வந்தான்.

"மிஸ்டர் செளரி, நாம் வினியோகிக்கிற எழுது பொருள்களோட தரமும் சரியில்ல. சரியான சமயத்துக்கும் வர்லேன்னு பல ஆபீஸ்கள்ல இருந்து வந்த புகார்களை. தனியாய் ஒரு பைல்ல போடச் சொன்னேனே. போட்டீங்களா?"

"இல்ல லார். அப்போ தேவையில்லைன்னு நினைச்சேன்."

"அப்படி நினைத்தால். நீங்களே தேவையான்னு நான் நினைக்க வேண்டியது வரும்."

"ஸார். நாலுபேர் முன்னிலையில், என் வயசுக்காவது."

"ஐ ஆம் ஸாரி மிஸ்டர் செளரி. நான் இங்கே கேட்டிருக்கப் படாதுதான். பட், அந்தக் கடிதங்கள் எனக்கு வேணுமே."

தேடிப் பிடிச்சுத் தாரேன் ஸார். சாப்புடுlங்களா லார்?" "நோ. தேங்க்ஸ்."

சரவணன், அறைக்குள் சிறையானான்.