பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வேரில் பழுத்த பலா

நேரம் ஒடிக் கொண்டிருந்தது. வெளியே காலடிச் சத்தம் கேட்டு சரவணன், கடிகாரத்தைப் பார்த்தான். மணி மாலை ஐந்தா? நழுவப் போன ராமச்சந்திரனைக் கூப்பிட்டான். "டெலிவரி. வீட்டுங்க. என்னாச்சு?" என்றான்.

"நாளைக்கு. சத்தியமாய் தாரேன் ஸார்."

"மறந்துடப்படாது. பீ கேர்புல்."

சரவணன் கூப்பிடாமலே செளரி வந்தார்.

"நாளைக்கு. எப்படியும் அந்த லெட்டருங்களை தேடிப் புடிச்சுத் தந்துடுறேன். ஸார்."

"ப்ளீஸ்."

"வரட்டுமா ஸ்ார்."

"யெஸ்."

அலுவலகம் வெறுமையாகிக் கொண்டிருந்தது.

வாட்ச்மேன் வந்து வணக்கம் போட்டான்.

"அன்னத்தைக் கூப்பிடுப்பா. ஏய்யா முழிக்கிறே? டெஸ்பாட்ச் கிளார்க் அன்னத்தை."

அன்னம், அரை நிமிடத்தில் வந்தாள். தனக்குள் பேசிய படியே

வந்தாள். சிதம்பரம் இன்னைக்கு ஆபீஸர் சாப்பிடலன்னு சொன்னார். அதே மாதிரி டிபன் காரியரும்.

"கூப்பிட்டீங்களா ஸார்."

"எங்கே தங்கியிருக்கீங்க?"

"ஒரு பெண்கள் விடுதியில்."

"நைட்ல. எதுக்குள்ளே போகணும்."

"எட்டு மணிக்குள்ளே."

"அப்படியா. நாளைக்கு ஈவினிங்ல ஏழு மணிவரைக்கும் இருக்கும்படியாய் வாங்க ஏன் யோசிக்கிறீங்க? ஒங்களை கடிச்சுத் தின்னுட மாட்டேன். முடியாதுன்னா வேண்டாம். சொல்லுங்க."

"முடி.."

"அப்படின்னா என்னம்மா அர்த்தம்?"

"உம்."

அந்தப் பதட்டத்திலும், சரவணனுக்குச் சிரிப்பு வந்தது. அவளோ,