பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 37

அப்பாவித்தனமாய் பேசிய அசட்டுத் தனத்தை நினைத்து வெட்கப் படுபவள் போல் நின்றாள்.

"ஓ.கே. நீங்க. போகலாம்."

அன்னம், மெல்ல மெல்ல நடந்தாள். எதுக்கு இந்த ஆள், நாளைக்கு இருக்கச் சொல்றார்..? ஒருவேளை கதைகளுலயும், சினிமாவுலயும், வாரது மாதிரி. சீ. இவரு அப்படிப்பட்டவர்னா, உலகத்தில் நல்லவங்களே இருக்க முடியாது. சரிதாண்டி உலகத்துல நல்லவங்க இருக்கிறதாய், ஒனக்கு யாருடி சொன்னது?

சரவணனின் கைகள் பம்பரமானபோது, அன்னம்மா தலைக்குள் பம்பரத்தை ஆடவிட்டவள் போல், ஆடி ஆடி நடந்தாள்.

4

சரவணன் வீட்டுக்குள் நுழைந்தபோது, அம்மா வெளியேறிக் கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்க்காமல், ஜன்னல் கம்பியில் முகம் பதித்தபடி, லயித்து நின்ற தங்கை வசந்தாவைப் பார்த்தான். எதிர் ஜன்னலில் ஒருவன் இவனைப் பார்த்ததும், நழுவினான். அப்படியும் இருக்குமோ. சீ. என் தங்கையா அப்படி? இருக்காது. தற்செயலாக நின்றிருப்பாள். கையில் ஏதோ புத்தகத்தோடுதான் நிற்கிறாள். படித்த அலுப்பில், முதுகு வலியில் ஜன்னல் பக்கம்போய் சாய்ந்திருப்பாள் என்றாலும், கேட்டான்

"வசந்தா. கைல. என்ன புக்..?"

"கா. காம்பட்டிஷன் மாஸ்டர்."

வசந்தா காட்டினாள். அவனுக்குத் திருப்தி. தன்னையே நொந்து கொண்டான். ஒருவனுக்கு மனோநிலை பாதித்தால், பிறத்தியார் மனத்தையும் நோய்க் கணக்கோடு பார்ப்பான் என்பது எவ்வளவு உண்மை...! அவன், தனது அறைக்குள் போகப் போனபோது, அம்மாக்காரி திரும்பி வந்தாள்.

"ஆமாடா. தெரியாமத்தான் கேட்கேன். நாம ஒரு காலத்துல இருந்த நிலைமையை நினைச்சுப் பார்க்கணும்."

"என்னம்மா சொல்றே?" "நம்ம ஊரு பெருமாளும், துரைச்சாமியும். ஒன்னைப் பார்க்க ஆசையோட ஆபீஸுக்கு வந்தால், அப்படியா விரட்டி அடிக்கிறது? நாமளும் பழைய நிலையை மறந்துடப் படாது.டா."