பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வேரில் பழுத்த பலா

"நான் பழைய நிலையை மறக்காததால்தான், விரட்டுனேன். வரப்புத் தகராறுல, அந்தப் பணக்காரன் பலவேசத்துக்கு வக்காலத்து வாங்கி, நம் அண்ணிய இவங்க ரெண்டுபேரும் மானபங்கமாய் பேசுன பழைய காலத்தை நான் மறக்கல."

"முப்பழி செய்தவனாய் இருந்தாலும், முற்றத்துக்கு வந்துவிட்டால், அவனை உபசரிக்கனும் ஊர்ல ஆயிரம் நடந்திருக்கலாம். அதுக்காக இப்படியா அடிச்சு விரட்டுற்து? இங்க வந்து ஒரு பாடு அழுதுட்டுப் போறாங்க... அப்புறம் ஒன் தங்கச்சிகிட்ட எதையோ எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க.."

"நீ இப்போ எங்கம்மா போறே?"

"பிள்ளையார் கோவிலுக்குத்தான். என்னால வேற எங்க போகமுடியும்.? வந்து மூணுமாசமாகுது. வண்ணாரப் பேட்டையில நம்ம ஜனங்களைப் பார்க்கல. ஒரு இடத்தைச் சுத்திப் பார்க்கல. நீ பெரிய அதிகாரியாம். ஒன்னைவிட சின்ன ஆபீஸர் வீட்டு முன்னால் கார் நிக்குது. அவங்க சொந்தக்காரங்கள மகாபலிபுரமோ, ஏதாமோ. அங்கேகூட கூட்டிக்கிட்டுப் போறாங்க. நீயும்தான் இருக்கே. ஏய் வசந்தா. அண்ணன்கிட்ட கேளும்மான்னு அப்போ சொல்லிக் கொடுத்துட்டு. இப்போ ஏன் ஒண்ணும் தெரியாதவள் ம்ாதிரி நிற்கே? ஒன்னோட சொந்த அண்ணன்தானடி ஒன்னோட ரத்தம்தானடி வேற மாதிரியா. கேளுழா. இவ்வளவுக்கும் செளமியோ செளக்கியமோன்னு ஒரு மவராசன் எத்தனை தடவ கார் தாரேன்னான்."

சமயலறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த அண்ணி தங்கம்மா, மாமியார் சொன்னது தனக்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டே உள்ளே ஒடுங்கிக் கொண்டாள். வேற மாதிரியா. என்ற வார்த்தை என்ன வார்த்தை?

சரவணன் சீறினான்.

நீ. மொதல்ல கோவிலுக்குப்போம்மா. அப்படியாவது ஒனக்குப்புத்தி வருமான்னு பார்ப்போம். வசந்தா, நீயும் போ. என்னது இது நம்ம ஊர் பெருச்சாளிங்க எழுதிக் கொடுத்ததா? நீயே கிழிச்சிப் போட்டுடு அநியாயம் செய்யாமலே நான் படுற பாடு போதும்.'

சரவணன், தனது அறைக்குள் வந்தான். ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுகூட அவனுக்குத் தோன்றவில்லை. பாவிப்பயல் செளமி நாராயணனுக்கு இப்படிப் பழி சொல்ல, எப்படி மனசு வந்தது? முன்பு இருந்த அறைக்குக்கூட, ஒரு தடவை ஆப்பிள் கூடையோடு வந்தான். மரியாதைக்காக ஒரு ஆப்பிளை எடுத்துக்