பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 39

கொண்டு, அனுப்பப்பட்டான். இதே இந்த வீட்டிற்கு, வாடகை முன்பணமாய், இரண்டாயிரம் ரூபாய் கேட்டார்கள். இதை செக்ரடேரியட் கமலேக்கருக்கு, டெலிபோனில் தெரிவித்து. சரவணன் கடன் கேட்டான். அப்போது, அவனுக்கு முன்னால் இருந்த செளமி, நான் தரேன் ஸார். நீங்க அப்புறமாய். எப்போ வேணுமின்னாலும் தாங்க ஸார் என்றார். சரவணன், நான் கடன் வாங்குறதா இல்ல அப்படியே வாங்குவதாய் இருந்தாலும் நெருக்கமானவங்ககிட்டே - அதுவும் இந்த ஆபீஸோடு சம்பந்தப் படாதவங்க கிட்டேதான் - கேட்பேன் என்றான். உடனே, அவர் மழுப்பலோடு சிரித்தார். அப்படியும் அந்த மழுமாறிப் பயல், இந்த வீட்டுக்கே காரோடு வந்து பெரியம்மா! ஓங்க மகனுக்குப் பிழைக்கத் தெரியலை. நான் என்ன லஞ்சமா கொடுக்கிறேன்?. ஒங்க வயித்துல பிறந்த மகன் மாதிரி நான் என்றான்.

வீட்டுக்கு ஒருவன் சைக்கிளில் வந்தாலேயே, பெரிய மனுஷியாய் ஆகிவிட்டதாய் நினைக்கும் அம்மா, காரில் வந்தவன் அப்படிப் பேசியதைப் பார்த்துவிட்டு, அவன் கையில்கூட முத்தமிட்டாள். ஒருதடவை, சரவணன்தான். அலுவலகத்திற்கு வந்த செளமியிடம் நான். நான் சுத்தமாய் இருக்க விரும்புறவன். என்னை அசுத்தப்படுத்தப் பார்க்காதிங்க ஸார். நீங்க நினைக்கிறது மாதிரி ஆளுல்ல நான் என்றான். அப்போதுகூட 'ஸாரி ஸ்ார். ஒங்க நேர்மைக்குத் தலைவணங்குறேன் ஸார் என்று சொன்னவன் இப்போது எப்படி எழுதியிருக்கான்.? இந்த 'டெம்போ விவகாரத்த வெச்சி புகார் லெட்டருக்கு எப்படி டெம்போ கொடுத்திருக்கான். நான் லஞ்சப் பேர்வழியாம். பில் கொடுத்தானாம். பணம் கொடுக்கலீயாம் மிரட்டுறேனாம். அடேய் செளமி ஒன் கை அழுகுண்டா. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சம்பளத்துல, ஸ்கூட்டர் அட்வான்ஸ், கூட்டுறவு சங்கக் கடன்னு எத்தனையோ பிடிப்புகள்ல சிக்கி அல்லாடுறவண்டா நான். அப்போகூட எவன் கிட்டயாவது வாங்கணுமுன்னு ஒரு எண்ணம் கூட வர்லடா. என்னைப் போயா அப்டி எழுதிட்டே? என் அம்மா ஒன்னை மகனாய் நினைச்சு. முத்தம் கொடுத்தாளே. அவள் பெத்த பிள்ளையையாடா இப்டி அவதூறு பண்ணிட்டே?.

'காபி என்ற குரல் கேட்டு, சரவணன் நிமிர்ந்தான். அவனது கலக்கத்தில், அண்ணி தங்கம்மா கலக்கத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. மெளனம்ாக டியைக் குடித்தான். அவனையே தங்கம்மா பார்த்தாள். 'முகம் ஏன் இப்படி கலங்கியிருக்குது? ஒருவேளை எனக்குத்தான் அப்படித் தெரியுதா? இவனும் ஒருவேளை என்னை உதாசீனம் செய்யுறானோ? அப்படின்னால் எனக்கும் நல்லது. பழையபடியும் வயல் வேலைக்குப் போயிடலாம். இல்லன்னா பிறந்த